Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஈராக்கியப் படையினர் மீட்ட திக்ரித்துக்கு பிரதமர் வருகை

    திக்ரித்: ஈராக்கிய படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ள திக்ரித் நகருக்கு அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி வருகைத் தந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் வசமிருந்த இந்த நகரை அரச படையினர் மீளக் கைப்பற்றியுள்ளனர்.

  • மத்திய கிழக்கில் திடீரென ஏற்பட்ட மணற்புயல்: மக்கள் அவதி!

    – MJ றியாத்: சவுதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட்ட வளைகுடாப் பிரதேசத்தில் சற்று முன்னர் (நேற்றிரவு) மணற்புயல் ஏற்பட்டதால், குறிப்பாக சாரதிகள் பெரிதும் அவஸ்தைக்குள்ளாகினர். கடந்த 3 மாதமாக மத்திய கிழக்கில் நிலைத்திருந்த குளிர் காலநிலை, கடந்த வாரத்திலிருந்து மாற்றம்பெற்றிருந்த இந்நிலையில், திடீரென நேற்றிரவு இத்தகைய மணற்புயல் மத்திய கிழக்கின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்றிருந்ததைக் காணமுடிந்தன.

  • த. தே. கூ. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா பயணித்த வேன் கல்லடியில் விபத்து

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா பயணித்த வேன் இன்று புதன்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கல்லடியில் விபத்துக்குள்ளானது.

  • காத்தான்குடி தள வைத்தியசாலையில் இலவச கண் சிகிச்சை முகாமின் ஆரம்ப நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஜம்இய்யதுஸ் ஷபாப் மற்றும் சர்வதேச அல் பஷர் பௌண்டேஷனும் இணைந்து நடாத்தும் கண்ணில் வெள்ளைபடர்படருவதை அகற்றும் இலவச கண் சிகிச்சை முகாமின் ஆரம்ப நிகழ்வு 01-04-2015 இன்று புதன்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.

  • 2014 சதாரணதர (O/L) பரீட்சையில் சித்தியடைந்த நெஞ்சங்களுக்கு எ.சி யஹியாகான் வாழ்த்து

    ACYK அம்பாறை: எனது உடன் பிறப்புக்களான சகோதரர்கள் 2014 சதாரணதர (O/L)  பரீட்சையில் மிகவும் கூடுதலானவர்கள் சித்தியடைந்திருக்கிறார்கள். சித்தி அடைந்த அனைத்து எனது நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மீண்டும் மீண்டும் நீங்கள் அனைத்து பரீட்சைகளிளும் சித்தி அடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • முன்னாள் விமானப்படை தளபதியிடமும் விசாரணை

    – எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மிக் ரக விமான கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக முன்னாள் விமானப்படை தளபதி மற்றும் முன்னாள் பதவிநிலை பிரதானி எயார் மாஷல் எடானாலட் பெரேரா கொழும்பு கொள்ளுப்பிட்டி நிதி மோசடி விசாணைப் பிரிவினால் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

  • மட்டக்களப்பில் மாட்டு வண்டியில் உலக முட்டாள்கள் தினம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: உலக முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 இன்று புதன்கிழமை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஒருவர் மாட்டு வண்டியில் இன்னும் சிக்ரட் புகைக்கும் உங்கள் சிலருக்கு இனிய பிறந்நாள் வாழ்த்துக்கள் என்ற பதாதையை கட்டி வீதியால் செல்வதை படங்களில் காணலாம்.

  • பவித்ரா வன்னியாராச்சியிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

    – எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: சுற்றறிக்கை ஒன்றின் மூலம் 2014 ஆம் ஆண்டு மின்சார சபையின் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் வேதன அதிகரிப்பை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு மாதமொன்றிற்கு 50 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக பொலீஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னாள் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடமும் மின்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரிடமும் வாக்குமூலங்களைப் பெற வேண்டுமென இலஞ்ச விசாரணைப் பிரிவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகேக்கு அறிவித்துள்ளது.

  • அல்-கிம்மா நிறுவனத்தின் வாழ்வுக்கு வழிகாட்டும் வேலைத்திட்டம்

    – எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் வாழ்வுக்கு வழிகாட்டும் நகர அழகுபடுத்தல் நிகழ்ச்சி திட்டத்திற்கமைவாக சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வணிகஸ்தாபனம் நிறுவப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ்.ஹாரூன்(ஸஹ்வி) தலைமையில் நேற்று (31.03.2015) இடம் பெற்றது.

  • நிறைவடைந்த உலகக் கிண்ணப் போட்டிகளும் நிகழ்ந்த மாற்றங்களும், முறியடிக்கப்பட்ட சாதனைகளும்…

    மெல்போன்: அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்தில் நடந்து முடிந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி துடுப்பாட்டத்தில் முன்னர் இல்லாத மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் ஒருசில உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டதாகவும் அமைந்தது. உலக கிண்ணத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

  • நைஜீரிய தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் புகாரி வெற்றி முகம்

    அபூஜா: நைஜீரியப் பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர், முகமது புகாரி, வெற்றி பெறும் நிலையில் இருப்பது போல் தெரிகிறது.தற்போதைய அதிபர் குட்லக் ஜோனதன், புகாரியுடன் தொலைபேசியில் பேசி, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

  • லீ குவான் யூ மீது விமர்சனம்: பதின்ம வயதுச் சிறுவன் மீது வழக்கு

    சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கிறிஸ்தவ மதத்தையும், சமீபத்தில் மறைந்த அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூவையும் விமர்சித்து, இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பதின்ம வயது சிறுவன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமையன்று லீ குவான் யூவின் இறுதிச் சடங்கு முடிவடைந்த சிறிது நேரத்தில் அமோஸ் யீ என்ற இந்த பதினாறு வயதுச் சிறுவன் கைதுசெய்யப்பட்டார். 20,000 சிங்கப்பூர் டொலர்கள் மதிப்பிலான பிணையில் பிறகு விடுவிக்கப்பட்டார்.

←Previous Page
1 … 475 476 477 478 479 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar