நான்கு நாள் டெஸ்டுக்கு பரிந்துரை

lords[1]லண்டன்: ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைத்து நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. நியுசிலாந்து அணி மே மாதம் இங்கிலாந்து செல்கிறது. அப்போது டெஸ்ட் போட்டியை 4 நாட்களில் நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் கொலின் கிரேவஸ் பரிந்துரைத்துள்ளார்.

4 நாட்களாக நடத்த திட்டமிட்டு இருக்கும் டெஸ்டில் தினசரி 110 ஓவர் வீச பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4 தினங்களில் 440 ஓவர் வீசப்பட்டு விடும். தற்போது தினசரி 90 ஓவர் வீசப்படுகிறது. 5 தினங்களில் 450 ஓவர் வீசப்படும். இதனால் 10 ஓவர் தான் குறைந்த நிலையில் இருக்கும்.

lords[1]
லண்டன் லோர்ட்ஸ் மைதானம்

இங்கிலாந்தின் இந்த திட்டத்தை இந்திய கிரிக்கெட் சபை ஆதரிக்காது என்று கூறப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி 1876 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒருநாள் போட்டி 1971ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. இருபது-20 போட்டி 2005இல் கொண்டு வரப்பட்டது.

இருபது-20 போட்டியின் தாக்கம் காரணமாக டெஸ்ட் போட்டி பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தது வருகிறது. இதனால் டெஸ்ட் போட்டியை நவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பகல்-இரவாக டெஸ்டை நடத்தலாம் என்ற யோசனை இருந்து வருகிறது.

Published by

Leave a comment