Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • SLMCயின் தலைமையினால் கல்குடாவின் குடிநீர் பிரச்சனைக்கும், புதுமுக வேட்பாளருக்குமான உடனடி தீர்வு

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கல்குடா: கல்குடாவில் அரசியல் ஆயுதமாக அன்மைக்காலமாக பலராலும் பயண்படுத்தப்பட்டு வந்த தூய குடிநீர் பிரச்சனையானது கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா அமைப்பினரின் தொடர்ந் தேர்ச்சியான முயற்சியின் பலனாக நேற்று சனிக்கிழமை 04.04.2015 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

  • மத சுதந்திரம், மொழி சுதந்திரம் அனைவருக்கும் வேண்டும்: மட்டக்களப்பில் ஜனாதிபதி

    மட்டக்களப்பு: மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொழி மற்றும் மத அடிப்படையில் ஒரு நாட்டு மக்கள் வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், அவர்கள் தமது மொழியை பேசுவதற்கும் மதத்தை பின்பற்றுவதற்கும் முழுமையான சுதந்திரத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

  • சிறிலங்கன் ஏர்லைன்ஸில் மிகப் பெரிய முறைகேடுகள்!!

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் நிர்வாகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் இடம்பெற்றதை விசேட விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது சம்பந்தமாக குற்றவியல் விசாரணை செய்யப்பட்டு குற்றத்துக்கு பொறுப்பானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

  • ‘விளையாட்டின் மூலம் பெறப்படும் ஆளுமைகளை சமூகத்துக்காகவும் பயன்படுத்த இளைஞர்கள் முன்வரவேண்டும்’: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள உங்களைப் போன்ற இளைஞர்கள் உங்கள் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பினையும் அந்தத் துறையோடு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது. விளையாட்டின் மூலம் பெறப்படும் ஆளுமைகளைப் பயன்படுத்தி சமூகத்துக்காகவும் நாட்டுக்காகவும் பங்களிப்புச் செய்ய நீங்கள் முன்வரவேண்டும் என நேற்று (03.04.2015) இடம்பெற்ற காத்தான்குடி ரோயல்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

  • முரண்பாட்டு அரசியல் மூலம் மீண்டும் பழைய குருடி கதவை திரடி என்கின்ற நிலை உருவாகலாம்

    புத்தளம் அபூ அஸ்ஜத் கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் தற்போது குளிர்கால யுத்தம் ஒன்று திறைமறைவில் இடம்பெற்றுவது தொடர்பில் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அது இந்த புதிய அரசாங்கத்தின் ஆட்சியின் முக்கிய பங்களாராக ஐக்கிய தேசிய கட்சியே இருக்கின்றது என்றவாதம் பிரதமரை ஆட்கொண்டுள்ளது.

  • மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை ஆசிர்வாதம்  (Bless Sri Lanka) கிறிஸ்தவ அமைப்பு ஏற்பாடு செய்த மாபெரும் பஸ்கா பண்டிகை நிகழ்வு 04-04-2015 இன்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

  • ஒரே மேடையில் சந்திக்கும் மைத்திரி, சந்திரிகா, மஹிந்த

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் எதிர்வரும் 10ம் திகதி ஒரே மேடையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹொரணையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவினால் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

  • காத்தான்குடி மத்திய கல்லூரியின் கால்பந்தாட்டத் தொடர் ஆரம்பமானது: இன்றைய போட்டியில் விக்டரி கழகம் அபார வெற்றி!

    – ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) இன் 85 வது ஆண்டினை முன்னிட்டு பல்வெறு நிகழ்வுகள் இடம்பெற இருப்பதுடன் அதன் தொடராக கழகங்ளுக்கிடையிலான முதலாவது உதைபந்தாட்ட போட்டி (03.04.2015 வெள்ளி) தேசிய பாடசாலை மைதானத்தில் கல்லூரி அதிபர் யூ.எல்.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்றது.

  • கவிமணி தலைமையில் காத்தான்குடியில் கலாசார நிகழ்வு

    – ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளன கலை கலாச்சார பிரிவின் ஏற்பாட்டினில் முதலாவது கவியரங்கு சம்மேளன அஷ் ஷஹீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் கவிமணி எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி) தலைமையில் நடைபெற்றது.

  • ஓட்டமாவாடி, வாழைச்சேனை, கிரான் பிரதேசத்திற்கான தூய குடிநீர் வழங்கும் திட்டம் அமைச்சர் றவுப் ஹக்கீம் பங்கேற்பு

    – ஏ.எல். டீன்பைரூஸ் வாழைச்சேனை: கல்குடா பிரதேச மக்களின் நீண்டகால பிரச்சினைகளில் ஒன்றாக இணங்கானப்பட்டு வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் ஓட்டமாவாடி, வாழைச்சேனை,கிரான் பிரதேசத்திற்கான தூய குடிநீர் வழங்கும் திட்டம் (04.04.2015 சனிக்கிழமை) இன்று பி.ப.03.00 மணிக்கு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும், நகர அபிவிருத்தி தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் அமைச்சருமான றவுப் ஹக்கீம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

  • இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் ஜயசூரிய இராஜினாமா

    கொழும்பு: இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயசூரிய தனது பதவி விலகல் கடிதத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் நவீன் திசானாயக்கவிடம் கையளித்துள்ளார்.

  • இன்று சந்திர கிரகணம் பிற்பகல் 2.31க்கு நிகழும்

    கொழும்பு: இவ்வருடத்தில் இடம்பெறக்கூடிய இரண்டு சந்திர கிரணங்களில் முதலாவது கிரகணம் இன்று 04 ஆம் திகதி இடம்பெறும். கொழும்பு பல்கலைக்கழக பெளதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். தென்கிழக்காசியாவுக்கு பூரண சந்திர கிரகணமாக காட்சிதரும் இந்தக் கிரணத்தின் இறுதிப் பகுதி, கிழக்கில் சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து மாலை 7.15 மணி வரை இலங்கைக்கு அரைச்சந்திர கிரகணமாகக் காட்சி தரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

←Previous Page
1 … 472 473 474 475 476 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar