போர்ட் எலிசபெத்: உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி யில் விளையாட தென்னாபிரிக்க அணித் தலைவர் டிவில்லியர்ஸ் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.உலகக் கிண்ணத் தொடரில் தென்னா பிரிக்க அணி அரையிறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியுசிலாந்திடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தென்னாபிரிக்க அணித் தலைவர் டிவில்லியர்ஸ், அரையிறுதிப் போட்டியை புறக்கணிக்க திட்டமிட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கியமான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் கைல் அப்போட் இடம்பெற வேண்டும் என்று டிவில்லியர்ஸூம், பயிற்சியாளர் டொமிங்கோவும் விரும்பினர். ஆனால் கடைசி நேரத்தில் சரியான திறமை இல்லாத வெரோன் பிலாண்டர் சேர்க்கப்பட்டார். அரசியல் அழுத்தம் காரணமாகவே இவர் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கடும் அதிருப்திக்குள்ளான டிவில்லியர்ஸ் அரையிறுதிப் போட்டியில் விளையாட மறுத்துள்ளார். பின்னர் அவர் சமாதானப்படுத்தப்பட்டதை அடுத்து விளையாட இணங்கியதாக தகவல்கள் கசிந்துள்ளன.தென்னாபிரிக்க அணித் தேர்வில் இன ஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் வெள்ளை நிற வீரர் அப்போட்டுக்கு பதிலாக கறுப்பின வீரர் பிலாண்டர் இடம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே வீரர்கள் தெரிவில் தலையிட்டதாக கூறப்படுவதை தென்னாபிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் மறுத்துள்ளார்.
Published by



Leave a comment