ஒரு ஜனநாயக நாட்டின் தேர்தல் விவாத மேடை

uk election– MJ

லண்டன்: பிரித்தானியாவின் பிரமர் தேர்வுக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி இடம்பெற இருக்கின்றன. இத்தேர்தலில் பிரித்தானியாவின் பிரதான 7 கட்சிகள் போட்டியிடுகின்ற நிலையில் இக்கட்சிகளின் தலைவர்கள், மக்கள் முன்றலில் தங்களது சம கால எதிர்காலத் திட்டங்களை எடுத்துக் கூறுவர்.

அது மாத்திரமன்றி, பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் கேட்கப்படும் கடந்த கால, சம கால எதிர்கால விடயங்கள் சம்பந்தமான கேள்விகளுக்கு தகுந்த பதில்களை இத்தலைவர்கள் இம்மேடையில் தெரிவிக்க வேண்டும்.

அதுமாத்திரமன்றி, குறைகளை விலாவாரியாக எடுத்துக்காட்டி கேள்விகள் தொடுக்கப்படும்.

uk election
பிரித்தானியாவின் பொதுத்தேர்தலில் களமிறங்கும் 7 வேட்பாளர்களும் விவாத மேடையில் நிற்பதை படத்தில் காணலாம்.

மேலும் 7 கட்சிகளின் தலைவர்களுக்குள்ளும் விவாதங்கள் இடம்பெற்று, மக்கள் முன்றலில் உண்மையும் கட்சிகளின் ஆளுமையும் வெளிப்படுத்தப்படும்.

இவ்விவாதத்தினை பிரித்தானியாவின் உள்ளுர் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பும். ஒளிவு மறைவின்றி தங்களது கருத்துக்களை பகிரங்கமாக மக்கள் முன்றலில் விவாதிக்கவும், பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக கேள்விகளைத் தொடுக்கும் இந்நடைமுறை, ஓர் ஜனநாயக நாட்டுக்கான அடிப்படைத் தகுதியை பறைசாற்றுகின்றது.

Published by

Leave a comment