Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி கண் சிகிச்சை முகாம் இன்று ஆரம்பம்

    – ஏ.எல். டீன் பைரூஸ் காத்தான்குடி: சிறி லங்கா ஹிறா பௌண்டேசன் ஏற்பாட்டினில் சிறிலங்கா ஜம் இய்யத்துஸ்ஷபாப் மற்றும் சர்வதேச அல்பஷர் பெண்டேசன் இணைந்து நடாத்தும் கண் சத்திர சிகிச்சை முகாம் 01.04.2015 புதன்கிழமை இடம் பெற இருப்பதனை முன்னிட்டு காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் தெரிவித்தார்.

  • காத்தான்குடி மத்திய கல்லூரி 85வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உள்ளுர்,வெளியுர் கழகங்களுக்கிடையிலான ஒரு சினேக புர்வ கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள்

    – ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலையின்) 85வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உள்ளுர்,வெளியுர் கழகங்களுக்கிடையிலான ஒரு சினேக புர்வ கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இடம்பெற இருப்பதனை முன்னிட்டு (சீட்டு எடுத்தல் மூலம் கழகங்களை தெரிவு செய்யும் நிகழ்வு) பாடசாலையின் அதிபர் கேப்டன் யூஎல்.ஏ. முபாரக் தலைமையில் (31.03.2015 செவ்வாய்) பாடசாலையில் இடம்பெற்றது.

  • சன்றைஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு

    – ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்டு வந்த பிரதேச கழகங்களுக்கிடையிலான உதை பந்தாட்டப் போட்டியில் 2015ம் ஆண்டுக்கான சம்பியனாக காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகம் தெரிவாகி உள்ளது.

  • மாணவி ஆயிசாவின் மரணத்தால் சக மாணவ சமூகம் சோகத்தில்

    – ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலயத்தில் தரம் எட்டாம் ஆண்டில் கல்வி கற்று வந்த மாஹிர் ஆயிஷா என்ற மாணவி சுகயீனம் காரணமாக கடந்த 29.03.2015 ஞாயிறு கொழும்பு வைத்திய சாலையில் காலமானார். இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.மாஹிர் மற்றும் காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலயத்தின் ஆசிரியை எம்.ஐ.உம்மு சல்மா ஆகியோர்களின் ஒரே மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • கொடுத்த வாக்குறுதியைப் பேணாது ஏமாற்றினார் ஹிஸ்புல்லாஹ்! உலமாக்கள் ஏமாற்றம்!!

    – புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: காத்தான்குடியில் அமைக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் உருவச் சிலைகளையும், பொம்மைகளையும் வைப்பது தொடர்பாக, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு தனது செயற்பாட்டிற்கான மார்க்க ரீதியான ஆதாரங்களையும், காரணங்களையும் விளக்குவதாக கடந்த 27ம் திகதி வெள்ளிக்கிழமை அந்த அமைப்பின் உலமாக்களிடம் வாக்குறுதியளித்திருந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,

  • இன்டர்நெட் எக்ஸ்புளோரரை கைவிட்டது மைக்ரோசொப்ட் – வருகிறது ‘ஸ்பார்டன்’!

    நியுயோர்க்: இணையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இனி செயல்பாட்டிற்குக் கிடைக்காது. இதற்குப் பதிலாக விண்டோஸ் 10 வெளிவரும்போது உடன் கிடைக்கும் பிரவுசரே முதன்மை இடம் பெறும். தற்போது ஸ்பார்டன் என அழைக்கப்படும் இந்த பிரவுசர் இதே பெயருடனோ அல்லது புதிய பெயருடனோ நுகர்வோருக்குக் கிடைக்கும்.

  • அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார் டேனியல் வெட்டோரி!

    வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சை வைத்தே காலம் கடத்தி வந்த, நியூசிலாந்து அணியில் பெயர் சொல்லக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரிதான். 1997ம் ஆண்டு தனது 18வது வயதில் வெட்டோரி நியூசிலாந்து ஒருநாள் அணிக்குள் காலடி எடுத்து வைத்தார்.

  • மோக்கா-மோக்கா பாடலை அப்ரி பாடி நக்கல்!! (வீடியோ)

    லாஹூர்: உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்திய அணியை வெற்றி கொள்ளாதது குறித்து ‘மோக்கா மோக்கா’ என்ற விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரம் பாகிஸ்தான் வீரர்களை கிண்டல் செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டிருந்தன.

  • குருக்கள்மடம் புதை குழியினை விரைவாக தோண்டுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குரக்கள்மடம் மனிதப்புதைகுழி தோண்டப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியான வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது

  • காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 13 மாணவிகளும், 2 மாணவர்களும் 9 ஏ சித்தி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நேற்று வெளியான 2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்தில்; 13 மாணவிகளும், 2 மாணவர்களும் 9 ஏ சித்தி பெற்றுள்ளதாக காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.

  • காது கேட்பதன் மூலம் வாய் பேச உதவுங்கள்

    – ஏறாவூர் அபூ பயாஸ் அன்பின் சகோதரர்களே, ஏறாவூ: ஏறாவூர்,மிச் நகரை சேர்ந்த காது கேட்காத,வாய் பேச முடியாதிருந்த நான்கு வயது சகோதரன் ரிப்தி ,உங்கள் மேலான உதவிகளைக்கொண்டு செய்யப்பட்ட 16-11-2013 அன்று செய்த சத்திர சிகிச்சை மூலம் “இன்று ஒரு குழந்தை எவ்வாறு தன் பேசும் திறனை வெளிப்படுத்துமோ அவ்வாறு இன்று பேச ஆரம்பித்திருக்கிறான்”. அல்ஹம்துலில்லாஹ்.

  • உலகை உலுக்கிய சிரியா சிறுமியின் புகைப்படம்

    டமஸ்கஸ்: சிரியாவில் புகைப்படம் எடுக்க குறி பார்த்த கமராவை துப்பாக்கி என பயந்து ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும், வேதனையையும் வெளிக்காட்டியுள்ளது.

←Previous Page
1 … 476 477 478 479 480 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar