Category: Your Kattankudy
-
உலகக் கிண்ணம் 2014: எதிர்பார்க்கப்படும் சிறந்த 10 வீரர்கள்
– S-90 ரியோ டி ஜெனிரோ: எதிர்வரும் வியாழன், 12ம்தேதி ஆரம்பமாகவுள்ள உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் 32 நாடுகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றாலும்கூட அதில் உலகளாவிய அளவில் அதிக ரசிகர்களை பெற்றவர்கள், சிறந்த விளையாட்டு வீரர்கள் சிலர் இருப்பார்கள்.
-
தேசிய ரீதியில் சமூக ஒற்றுமை மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான செயலமர்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் தெஹிவளை: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒருங்கிணைப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கவுன்ஸிலின் (Council for Cooperation and Coordination- CCC) ஏற்பாட்டில் தேசிய ரீதியில் சமூக ஒற்றுமை மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான செயலமர்வு கடந்த 08.06.2014 அன்று தெஹிவளை முஹைதீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
-
புதுடில்லிக்கு மாற்றலாகிச் செல்லும் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் பி. குமரன் -நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகராக நீண்ட காலம் பணியாற்றி புதுடில்லிக்கு மாற்றலாகிச் செல்லும் பி. குமரன், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை 10 இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்து பிரியாவிடை பெற்றுக்கொண்டார்.
-
ஈராக்கின் மோசுல் நகர் போராளிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது!
– AF-80 பக்தாத்: ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசுலிலுள்ள முக்கியமான அரச கட்டிடங்களை போராளிகள் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் மோசுல் நகரின் முழுக் கட்டுப்பாடு அவர்கள் வசம் வந்துள்ளது.
-
ஐ.நா. தலைமையகத்தில் கையளிக்கப்பட்ட இளைஞர்களுக்கான கொழும்பு பிரகடணம்
– றிஸ்கான் முகமட் கொழும்பு: அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான உலக மாநாட்டின் இறுதியல் வெளியிடப்பட்ட சர்வதேச இளைஞர் சமுதாயத்திற்கான கொழும்பு பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபையின் செயாளலர் நாயகம் பான் கீ மூனிடம் இளைஞர் விவகார மற்றம் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களினால் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
-
இந்தியப் பிரதமர் மோடியின் ஒரு மாதச் சம்பளம் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய்
– S-90 டெல்லி: உலக அளவில் உள்ள பிரதமர்களில் குறைந்த சம்பளம் வாங்கும் பிரதமராக, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உள்ளார். அவரது மாத சம்பளம் இந்திய ரூபாய் 1.60 லட்சம் ஆகும். அதேசமயம் உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரதமராக ரஷ்ய ஜனாதிபதி, பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். மோடிக்கு இந்த பட்டியலில் 12வது இடம் கிடைத்துள்ளது.
-
கிண்ணியா தளவைத்தியசாலையின் தீர்க்கமுடியாது தொடரும் குறைபாடுகள், மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பது யார்?
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா தளவைத்தியசாலையின் குறைபாடுகள் சம்பந்தமாக பலமுறை மக்களால் வைத்தியசாலை நிருவாகத்திடம் முன்வைக்கப்பட்டும் அக்குறைபாடுகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருந்தமையினால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களே வீதியில் இறங்கி போராட்டம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு கிண்ணயா மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
-
‘எதிர்வரும் ரமழான் 50 செல்சியஸ் வெப்பத்தையும், 15 மணித்தியால நேரத்தையும் கொண்டதாக அமையும்’ – சவுதி அரேபியா
– MJ றியாத்: எதிர்வருகின்ற புனித ரமழான் மாதம் அதிக வெப்பமுடைய 50 செல்சியஸ் அளவு காணப்படுவதுடன், 15 மணித்தியாலங்கள் வரை நோன்பு நோற்கவேண்டி ஏற்படும் எனவும் சவுதி அரேபியாவின் வானியல் மற்றும் சுற்றாடல் திணைக்களத்தின் தலைவர் ஹூஸைன் அல் கஹ்தானி தெரிவித்துள்ளார்.
-
நைஜீராவில் மீண்டும் 20 பெண்கள் கடத்தப்பட்டனர்
– SHM அபுஜா: நைஜீரியாவில் மீண்டும் போக்கோஹரம் தீவிரவாதிகள் 20 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திய சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரத்தில் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தி சென்றது போக்கோஹரம் தீவிரவாதிகள் என சந்திக்கப்படுகின்றது.
-
தூரசேவை பஸ்கள் நிறுத்தும் உணவகங்களின் தரத்தை மேம்படுத்த 3 மாதகால அவகாசம்
கொழும்பு: தூர சேவை பஸ்கள் உணவிற்காக நிறுத்தும் உணவகங்களின் தரத்தை மூன்று மாத காலத்தினுள் மேம்படுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுத் தலைவர் ரேணுக பெரேரா உணவக உரிமையாளர்களுக்கு பணித்துள்ளார்.
-
கராச்சிக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் ரத்து
கொழும்பு: பாகிஸ்தானின் கராச்சி விமான நிலைய தாக்குதலையடுத்து இலங்கை யிலிருந்து புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்கா விமான நிலையம் அறிவிக்கிறது.
-
கிழக்கு முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் திடீர் முடிவுகள்
கொழும்பு: கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக பல்வேறுபட்ட வதந்திகளும் செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளது.