கிண்ணியா: கிண்ணியா தளவைத்தியசாலையின் குறைபாடுகள் சம்பந்தமாக பலமுறை மக்களால் வைத்தியசாலை நிருவாகத்திடம் முன்வைக்கப்பட்டும் அக்குறைபாடுகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருந்தமையினால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களே வீதியில் இறங்கி போராட்டம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு கிண்ணயா மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கிண்ணியா தளவைத்தியசாலையில் கிண்ணியா பிரதேச மக்கள் மட்டுமல்ல கிண்ணியாவை அண்டிய பிரதேசங்களான வெள்ளைமணல், நாச்சிக்குடா, வான் எல, முள்ளிப்பொத்தானை, இன்னும் பல பிரதேச மக்களும் நன்மையடைவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று 10.06.2014 செவ்வாய்கிழமை மதியம் 12 மணியளவில் கிண்ணியா தளவைத்தியசாலைக்கு முன்பாக மக்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளும் சேர்ந்து போராட்டத்தினை நடத்தியிருந்தனர். இங்கு போராட்டத்தில் பங்கு கொண்ட நோயாளி ஒருவர் குறிப்பிடும் போது ‘நான் நேற்று இரவு 10 மணியளவில் என்னை பரிசோதித்தத வைத்தியர் நாளை 10 வரை எதுவும் சாப்பிடவேண்டாம் எனக் கூறியிருந்தார். ஆனால் இன்று மதியம் 12.00 மணிவரை எந்த ஒரு வைத்தியரும் பரிசோதிக்க வரவில்லை. நாங்கள் கேட்டதற்கு மயக்க ஊரி போடும் வைத்தியர் இன்னும் வரவில்லை என்று கரிசனை இல்லாமல் பதில் கூறுகின்றார்கள்.
இவ்வைத்தியசாலையின் குறைபாடுகள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பட்டியல் படுத்திக்கொண்டே போகலாம். இவற்றை பார்ப்பதற்கோ இது பற்றி விசாரிப்பதற்கோ யாரும் இல்லாத நிலை. ஆத்தோடு நாங்கள் இப்படி வீதியிலிறங்கி போராடும் நிலைக்கு வந்தும் எந்த அரசியல்வாதிகளம் இது வரை வந்து என்ன விடயமென்ற பார்க்கவில்லை. இதனை யாரிடம் போய் நாங்கள் முறையிடுவது’ என அழுதவாறே குறிப்பிட்டார்.
குறித்த விடயத்திற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பது யாரென்று இவர்கள் கேள்விகள் எழுப்பும் போது இதற்கு பதில் சொல்லி தீர்வினை பெற்றுக்கொடுப்பது யார் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வது யார்?
Published by



Leave a comment