கராச்சிக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் ரத்து

Book-Travel-on-SriLankan-Airlines[1]கொழும்பு: பாகிஸ்தானின் கராச்சி விமான நிலைய தாக்குதலையடுத்து இலங்கை யிலிருந்து புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்கா விமான நிலையம் அறிவிக்கிறது.

நேற்றுப் பகல் 1.00 மணிக்கு யூ. எல். 183, ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட ஆயத்தமாக இருந்த போதும் இதன் பயணம் ரத்துச் செய்யப்பட்டது. இதே விமானம் கராச்சியிலிருந்து மீண்டும் இலங்கைக்கு இரவு 9.20க்கு புறப்படுவதற்கு இருந்ததாகவும் விமான நிலையம் அறிவிக்கிறது.

இன்று பகல் 1.00 மணிக்கும் கராச்சி நோக்கி ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட வேண்டும். எனினும் கராச்சி விமான நிலையத்தின் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னரே விமானம் சேவை நடத்துவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Published by

Leave a comment