தூரசேவை பஸ்கள் நிறுத்தும் உணவகங்களின் தரத்தை மேம்படுத்த 3 மாதகால அவகாசம்

sri%20lanka%20street%20food[1]கொழும்பு: தூர சேவை பஸ்கள் உணவிற்காக நிறுத்தும் உணவகங்களின் தரத்தை மூன்று மாத காலத்தினுள் மேம்படுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுத் தலைவர் ரேணுக பெரேரா உணவக உரிமையாளர்களுக்கு பணித்துள்ளார்.

தவறும் உணவகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தூர சேவை பஸ்கள் உணவுபெற நிறுத்தும் உணவகங்களின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக சுகாதார அமைச்சும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த உணவக உரிமையாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு நேற்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், சுகாதார அமைச்சு மேற்கொண்ட கணிப்பீட்டின்படி தூர சேவை பஸ்கள் நிறுத்தும் உணவகங்கள் ‘சீ’ தரத்தில் தான் உள்ளன. இது மிகவும் குறைந்த தரமாகும். பயணிகளுக்கு சுத்தமான தரம் கூடிய உணவு வகைகளை வழங்க வேண்டும். மலசல கூட வசதிகளும் உரிய தரத்தில் இருக்க வேண்டும்.

சகல தூர சேவை சிற்றுண்டிச்சாலைகளையும் பதிவு செய்யவும் இவற்றின் தரத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். தனியார் பஸ்களினூடாக சிறந்த சேவை வழங்கப்படாததால் தனியார் பஸ் பயணிகள் தனியார் பஸ்களை விட்டும் தூரமாகி வருகின்றனர்.

சிற்றுண்டிச்சாலைகளின் தரத்தை 3 மாதகாலத்தினுள் மேம்படுத்த உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்களை முழுமையாக அமுல்படுத்தி உங்களை பயமுறுத்த நான் தயாராக இல்லை. பயணிகளுக்கு நிபந்தனையற்ற முறையில் இன்று தரமான உணவுகளை வழங்குவது உணவக உரிமையாளர்களின் பொறுப்பாகும்.

3 மாத காலத்தினுள் 50 வீதமாவது ஹோட்டல்களை மேம்படுத்தி உரிய சேவை வழங்காவிடின் உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும்.

ஹோட்டல் மலசல கூடங்களை மேம்படுத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

நான் இந்த அதிகாரசபையை பொறுப்பேற்ற 2 மாத காலத்தினுள் அதிகாரசபை வெளிநபர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளின் படி வழங்க வேண்டியிருந்த 860 இலட்சம் ரூபாவில் 233 இலட்சத்தை வழங்காதிருக்க தேவையான நடவடிக்கை எடுத்தேன். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசியதன் பயனாக அதிகாரசபை பணத்தில் 233 இலட்சத்தை இவ்வாறு மிச்சப்படுத்த முடிந்தது என்றார்.TK

Published by

Leave a comment