றியாத்: எதிர்வருகின்ற புனித ரமழான் மாதம் அதிக வெப்பமுடைய 50 செல்சியஸ் அளவு காணப்படுவதுடன், 15 மணித்தியாலங்கள் வரை நோன்பு நோற்கவேண்டி ஏற்படும் எனவும் சவுதி அரேபியாவின் வானியல் மற்றும் சுற்றாடல் திணைக்களத்தின் தலைவர் ஹூஸைன் அல் கஹ்தானி தெரிவித்துள்ளார்.
ரமழான் ஆரம்பத்தில் 15 மணித்தியாலங்களாக இருப்பினும், ரமழானின் இறுதிப்பகுதியில் 14 மணித்தியாலங்கள், 40 நிமிடங்கள் வரை குறைந்து செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா, யன்பு, றியாத் மற்றும் தமாம் ஆகிய நகரங்களில் ஒருமித்த வெப்பநிலை நிலவும். இன்னும் சில இடங்களில் இதனைவிடவும் குறையலாம். எனினும் ரமழானில் மேற்கூறிய நகரங்களில் 47-50 செல்சியஸ் இடைப்பட்ட வெப்பநிலை தொடர்ந்தும் நிலவும் என ஹூஸைன் அல் கஹ்தானி தெரிவித்துள்ளார்.
ஆகக்கூடிய வெப்பநிலையாக மக்கா 49.8 செல்ஸியஸ் 01-07-1989ம் வருடம் பதிவானது. மதீனா 20-07-2005 இல் 49 செல்சியசும், றியாத் 25-07-1987 இல் 48 செல்சியஸ் வெப்பமும், 28-07-2007 இல் தமாம் 50 செல்சியஸ் வெப்பத்தையும் அதிகமாகப் பெறப்பட்ட இடங்களாக பதியப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இவ்வுயர் வெப்பநிலை ஜூலை மாதத்திலேயே இடம்பெற்றிருக்கின்றன. சவுதி அரேபியாவைச் சூழவுள்ள ஏனைய வளைகுடா நாடுகளிலும் இவ்வெப்பநிலை 50 செல்சியஸ் வெப்பத்தை நெருங்கும் என நாங்கள் எதிர்பார்ப்பதாக ஹூஸைன் அல் கஹ்தானி மேலும் தெரிவித்தார்.
Published by

Leave a comment