Category: Your Kattankudy
-
புனித உம்ரா கடமையை நிறைவேற்ற பல மில்லியன் கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளிலும் இருந்து புனித மஸ்ஜிதுல் ஹராம் மக்காவுக்கு வருகை
– மக்காவிலிருந்து பழுலுல்லாஹ் பர்ஹான் மக்கா: பல மில்லியன் கணக்கான இஸ்லாமியர்கள் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆகாயம் மூலமாகவும் தொடரூந்துகள் மூலமாகவும் சவூதி அரேபிய நாட்டின் புனித மக்கா நகரத்தில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராமை வந்தடைந்த வண்ணமுள்ளதாக இலங்கையிலிருந்து புனித மக்கா சென்ற எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
-
தராவீஹ் தொழுகையின் றக்அத்துக்களுடைய எண்ணிக்கை பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்
– ACJU அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
-
மொடல் அழகி ஹஸினை மணந்தார் இந்திய கிரிக்கட் வீரர் சமி
கொல்கத்தா: கொல்கத்தாவைச் சேர்ந்த மொடல் அழகி ஹசின் ஜஹன் என்பரை கரம் பிடித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஷமி. கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹசின் ஜஹனை சந்தித்த மொகமது ஷமி அவரை திருமணம் செய்து கொண்டார்.
-
கராச்சி விமானநிலைய தாக்குதல்: தீவிரவாதிகள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 28ஆக உயர்வு!
– MJ கராச்சி: கராச்சி சர்வதேச விமான நிலையம் நேற்றிரவு தீவிரவாதிகளின் பயங்கரத் தாக்குதல்களுக்குள் உள்ளானது. இத்தாக்குதலில் கனரக ஆயுதங்கள் மற்றும் ரொக்கட்கள் பயன்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
-
ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயம் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு
– ஏறாவூர் அபூபயாஸ் ஏறாவூர்: நேற்று கிண்ணியாவில் நடந்த மாகாண மட்ட கிரிகெட் போட்டியில் ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.
-
உதைப்பந்தாட்டத்தில் மஞ்சள், சிவப்பு அட்டை விதிமுறைகள்
– M முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம் லண்டன்: சர்வதேச உதைப்பந்தாட்டத்தின் விதிகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு அடைகள் (Yellow Card, Red Card) பிரதான அம்சமானதொன்றாகும். வீரர்கள் உதைப்பந்தாட்ட விதிமுறைகளை மதித்து, ஆபத்தில்லாத போட்டியை நடாத்தி முடிப்பதற்கு இந்த மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் பிரதானமாதாகும்.
-
கராச்சி விமான நிலையம் தாக்கப்பட்டது!
– MJ கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையம் சற்றுமுன்னர் ஆயுதம் தாங்கிய நபர்களால் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டது. அடையாளம் தெரியாதவர்களால் இத்தாக்குதல் இன்றிரவு சற்று முன்னர்இடம்பெற்றது.
-
மீன்களுக்கு உத்தரவாத விலை: ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு
கொழும்பு: மீன்களுக்கு உத்தரவாத விலையினை நிர்ணயிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
-
போலி இணையத்தளம் ஊடாக 1 கோடியே 60இலட்சம் ரூபா மோசடி
http://www.slbf.com ஊடாக எவரேனும் பணம் செலுத்தியிருப்பின் உடன் முறைப்பாடு செய்யவும் கொழும்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளம் ஒன்றை தயாரித்து அதனூடாக தென்கொரியாவுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி ஒருகோடியே 60 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த கணவன்,
-
பிரெஞ் ஓபன் டென்னிஸ்: 9 ஆவது முறையாக வென்று நடால் சாதனை
பரிஸ்: ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒன்பதாவது முறையாக பிரெஞ் ஓபன் டென்னிஸ் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளார்.இன்று-ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் இறுதிப் போட்டியில் நடால்இ செர்பியாவின் நோவாக் யாக்கோவிச்சை 3-6, 7-5, 6-2, 6-4 எனும் செட்கணக்கில் வென்றார்.
-
மஞ்சள் ஏன் உணவில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்?
– SHM மஞ்சள் (Turmeric) ஒரு இயற்கை நிவாரணியாகும். நம் தோல்களில் ஏற்படும் சிறு காயங்கள் முதல் பல வெட்டுக் காயங்கள் வரை ஆற்ற வல்லது இந்த மஞ்சள். இலங்கை இந்திய உணவுவகைகளான கறி மற்றும் சாம்பார் பதார்த்தங்களில் இந்த மஞ்சல் சேர்க்கப்பட்டு வருகிறது.
-
‘கடத்தப்பட்ட மாணவிகள் தீவிரவாதிகளின் துணிகளையும் கழுவுகின்றனர்’
அபுஜா: நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள பாடசாலை மாணவிகளை விடுவிப்பது தொடர்பாக ஆயுதக் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஆங்கிலிக்கன் திருச்சபை பாதிரியார் ஒருவர், அப்பெண்களில் பெரும்பான்மையானோர் நாட்டுக்கு வெளியில் குறைந்தது மூன்று இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.