இந்தியப் பிரதமர் மோடியின் ஒரு மாதச் சம்பளம் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய்

modi– S-90

டெல்லி: உலக அளவில் உள்ள பிரதமர்களில் குறைந்த சம்பளம் வாங்கும் பிரதமராக, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உள்ளார். அவரது மாத சம்பளம் இந்திய ரூபாய் 1.60 லட்சம் ஆகும். அதேசமயம் உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரதமராக ரஷ்ய ஜனாதிபதி, பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். மோடிக்கு இந்த பட்டியலில் 12வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியப் பிரதமர் மோடியின் அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம், தினசரி படி என்கிற வகையில் மாதம் ரூ.62 ஆயிரம், எம்.பி. நிதி என்ற வகையில் ரூ.45 ஆயிரம் மேலும், இதர செலவுகள் என்ற வகையில் ரூ.3 ஆயிரம் என ஆகமொத்தம் ரூ.1 இலட்சத்து 60 ஆயிரம் மாத சம்பளமாக கிடைக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு ஆண்டுக்கு 2.33 கோடி ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் ரூ.2.33 கோடி சம்பளம் வாங்குகிறார். பெல்லியம் பிரதமர் ரூ.1.85 கோடி சம்பளத்துடன் 4வது இடத்தில் இருக்கிறார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 1.66 கோடி ரூபாய் சம்பளத்துடன் இந்த பட்டியலில் 5வதாக இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் ரூ.1.41 கோடி சம்பளத்துடன் 7 வது இடத்திலும் சீன ஜனாதிபதி ரூ.23.47 லட்சத்துடன் 11 வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய பிரதமர் மோடியின் ஆண்டு வருமானம் ரூ.19.20 லட்சம் ஆகும். இவருக்கு பட்டியலில் 12வது இடம் கிடைத்துள்ளது. இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ரூ.18 லட்சம் வருமானத்துடன் பட்டியலில் 13வது இடம் பெற்றுள்ளார்.

இலங்கை அரசியல்வாதிகளின் வருமானங்கள் பற்றி ‘பட்டியலில்’ காணமுடியாமல் உள்ளது.

 

 

 

 

 

 

Published by

Leave a comment