-
ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு ‘Bed Side Locker ‘ கையளிப்பு
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர், புன்னக்குடா வீதியில் அமைந்துள்ள ஷாட் மோட்டர்ஸ் உரிமையாளர் ஜனாப் நஜிமுதீன் அவர்களிடம் வைத்தியசாலை நிருவாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, டேவிட் பீரீஸ் மோட்டர்ஸ் நிருவாகிகளால் 362000/- ரூபா பெறுமதியான 50 Bed Side Locker கள் வைத்தியசாலை பொறுப்பாளர் Dr. MHM. தாரிக் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது.
-
புதிதாக அமைக்கப்பட்ட கிறவல் வீதியை அகற்றக் கோரி NFGGயிடம் மக்கள் மகஜர்
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: முறையற்ற மற்றும் திட்டமிடப்படாத முறையில் அமைக்கப்பட்ட கிறவல் வீதியினால் தாம் பெரிதும் அசௌகரிகங்களுக்கு உள்ளாவதாகத் தெரிவித்து மேற்படி வீதியினை உடனடியாக அகற்றித் தருமாறு கோரி NFGGயிடம் பிரதேச மக்கள் மகஜர் ஒன்றினைக் கையளித்தனர்.
-
இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது தென்னாப்பிரிக்கா
சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் முதலாவது காலிறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.
-
மீஸான் சிறீலங்கா நிறுவனத்தின் மனித நேயம் பேணும் இரண்டாவது இரத்ததான முகாம்
மீஸான் சிறீலங்கா/ ஏ.எல். டீன் பைரூஸ் காங்கேயனோடை: ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காங்கேயனோடை பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக பல்வேறு சமூகப்பணிகளைச் செய்து வரும் மீஸான் சிறீலங்கா நிறுவனத்தின் மனித நேயம் பேணும் இரண்டாவது இரத்த தானமுகாம் எதிர்வரும் 21.03.2015 சனிக்கிழமை இடம் பெறவுள்ளது.
-
தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் சுருண்டது இலங்கை
சிட்னி: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 133 ஓட்டங்களில் சுருண்டது. உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதி சுற்று இன்று தொடங்கியது. இதில் சிட்னியில் நடக்கும் முதல் காலிறுதியில் இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
-
அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது சிரியா
டமஸ்கஸ்: அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றை லடாகியா நகருக்கு அருகே சுட்டு வீழ்த்தியிருப்பதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியாவின் வட மேற்குப் பகுதியில் அதிபர் பஷர் அல் – அஸாத் வலுவாக உள்ள பிராந்தியத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த ஆளில்லா விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால், அது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது தெரியவில்லையென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
“அமைச்சர் றிசாத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் சதி”
வன்னி: அமைச்சர் றிசாத் பதியுதீன் வன்னி மாவட்ட மக்களுக்கு செய்யும் அபிவிருத்தி திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், சில அரசியல் வங்குரோத்து மற்றும் மக்களின் நிராகரிக்கப்பட்டவர்களை வைத்து பொய்யான கதைகளை புனைந்து அதனை ஒரு தனியான இலத்திரணியல் ஊடகத்துக்கு வழங்கி வருவதை வண்மையாக கண்டிப்பதாக வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் முஹம்மத் சரூக் தெரிவித்துள்ளார்.
-
முதலாவது காலிறுதிப் போட்டி: நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்
சிட்னி: உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதலாவது காலிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் இன்று போட்டியிடவுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
-
இருதய சத்திரசிகிச்சைக்கு உதவி கோரல்
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் – 06 A, 305, போக்கர் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சகோதரர் அப்துல் நாசர் என்பவரின் எட்டு மாத வயதுடைய அப்துல்லாஹ் என்ற குழந்தைக்கு பிறப்பிலிருந்தே இருதய நோய் இருந்து வருவதால் கொழும்பு லேடி றிச்வே வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்திய போது ‘இருதய வால்பு மாற்று சத்திர சிகிச்சை செய்யவேண்டும் ‘என்று வைத்தியர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
-
கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஹரீஸ் எம்.பி தலைமையில் ஆராயும் உயா்மட்டக் கூட்டம்
– ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்தை முன்னடுப்பது தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆராயும் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (17) நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.
-
இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகளும் இவைகள்தான்
கொழும்பு: இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட உள்ளது. அவையாவன,
-
இஸ்ரேல் தேர்தல் வாக்களிப்பு: கடும் சவாலை எதிர்கொள்கிறார் நெதன்யாஹூ
டெல் அவிவ்: இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க தொடங்கிவிட்டனர். அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இம்முறையும் தேர்தலில் வெற்றிப்பெற்று அந்நாட்டில் அதிக நாட்கள் பதிவியிலிருந்த தலைவராக வர நினைக்கிறார். நெதன்யாஹூவின் லிகுட் கட்சி, மைய-இடது சாரி கூட்டணியை விட பின்தங்கியே உள்ளதாக கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.