இருதய சத்திரசிகிச்சைக்கு உதவி கோரல்

unnamedஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: ஏறாவூர் – 06 A, 305, போக்கர் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சகோதரர் அப்துல் நாசர் என்பவரின் எட்டு மாத வயதுடைய அப்துல்லாஹ் என்ற குழந்தைக்கு பிறப்பிலிருந்தே இருதய நோய் இருந்து வருவதால் கொழும்பு லேடி றிச்வே வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்திய போது ‘இருதய வால்பு மாற்று சத்திர சிகிச்சை செய்யவேண்டும் ‘என்று வைத்தியர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இச்சிகிச்சைக்காக சென்ற  05 – 02 – 2015 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி கூறி இருந்ததோடு, செயற்கை இருதய வால்பு, ஏனைய மருந்துப்பொருட்கள் வெளியிலிருந்து எடுத்து தரவேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

இக்குழந்தையின் சத்திரசிகிச்சைக்கான மேற்படி வால்பு உட்பட ஏனைய செலவுகளாக சுமார் மூன்று இலட்சம் ரூபா அளவில் செலவாகும் என்று வைத்திய வட்டாரம் தெரிவித்திருந்தது.

இக்குழந்தையின் பெற்றோருக்கு இப்பணத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதால் உதவும் உள்ளங்களின் உதவியை நாடி, பல்வேறு இணைய ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தியதால் 218,000.00 ரூபா அளவில் பணம் சேர்ந்தது. அல்ஹம்துலில்லாஹ். மிகுதிப் பணத்தை அவரது குடும்ப உறவினர்கள் மூலம் பெற்று வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது 15-03-2015 அன்று சத்திரசிகிச்சைக்கு அனுமதியுங்கள் என்று கூறியுள்ளனர்.

உரிய திகதிக்கு முன்பே குழந்தையை லேடி றிச்வே வைத்தியசாலையில் கிளினிக்குக்காக கொண்டு சென்ற போது, இக்குழந்தையின் முழுவிபரமும் அறிந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ள இருந்த வைத்தியர் முனசிங்க என்பவர் மாறுதலாகி சென்றுவிட்டார் என்று கூறியுள்ளனர்.

அதன் பிறகு அவ்வைத்தியரை தனியார் வைத்தியசாலையில் (லங்கா ஹோஸ்பிடேல்) சந்தித்தபோது மாறுதலாகி வந்ததால் அங்கு செய்ய முடியாதென்றும், முடிந்தால் இங்கேயே  செய்யுங்கள் என்று கூறி அதற்கான செலவு மதிப்பீடையும் வழங்கியுள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் இக்குழந்தைக்கு இருதய சத்திரசிகிச்சை செய்ய ஏழு இலட்சம் (700000) தேவைப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இத்தொகையில் ஒரு இலட்சம் ரூபா அளவில் ஜனாதிபதி நிதியம் மூலம் பெற்றுக் கொள்ள வாய்ப்பும் இருக்கிறது.

இக் குழந்தையை ஆரம்பத்தில் இருந்தே வைத்திய பரிசோதனை செய்த Dr. முனசிங்க அவர்களிடமே சத்திரசிகிச்சையை மேற்கொள்ள பெற்றோர்கள் விருப்பங்கொண்டுள்ளனர்.

தற்போது இக்குழந்தையின் பெற்றோரிடத்தில் மூன்று இலட்சம் (300000/-) ரூபா கைவசம் இருக்கிறது. மிகுதி மூன்று இலட்சம் (300000/-) ரூபாவுக்காக உங்கள் உதவியை நாடி மீண்டும் வந்திருக்கிறார். இக் குழந்தையின் நலன் கருதி அல்லாஹ்வுக்காக உதவுங்கள்.

இக்குழந்தையின் சத்திரசிகிச்சைக்கு உதவுவதன் மூலம் இறைவனின் பொருத்தத்தை பெற்றுக்கொள்வோம்.  

தந்தையின் மக்கள் வங்கி கணக்கு இலக்கம்
A. K. NASAR, PEOPLES BANK., ERAVUR. A/C:- 123 2001 70014342

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment