டெல் அவிவ்: இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க தொடங்கிவிட்டனர். அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இம்முறையும் தேர்தலில் வெற்றிப்பெற்று அந்நாட்டில் அதிக நாட்கள் பதிவியிலிருந்த தலைவராக வர நினைக்கிறார். நெதன்யாஹூவின் லிகுட் கட்சி, மைய-இடது சாரி கூட்டணியை விட பின்தங்கியே உள்ளதாக கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு கட்சிகளுக்கும் இடையிலான போட்டி முன்பு எதிர்ப்பார்த்ததை விட கடுமையாக உள்ளது. தேசிய பாதுகாப்பு விவகாரத்திற்கு நெதன்யாஹூ தனது பிரச்சாரங்களில் கவனம் செலுத்தினார்.
வாழ்க்கை செலவு அதிகரிப்பு போன்ற உள்நாட்டு பிரச்சனைகளிலிருந்து நெதன்யாஹூ மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாக யிட்சாக் ஹெர்ஸாக் மற்றும் சிபி லிவ்னி ஆகியோர் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியான ஸியோனிஸ்ட் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
Published by

Leave a comment