ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு ‘Bed Side Locker ‘ கையளிப்பு

unnamedஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: ஏறாவூர், புன்னக்குடா வீதியில் அமைந்துள்ள ஷாட் மோட்டர்ஸ் உரிமையாளர் ஜனாப் நஜிமுதீன் அவர்களிடம் வைத்தியசாலை நிருவாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, டேவிட் பீரீஸ் மோட்டர்ஸ் நிருவாகிகளால் 362000/- ரூபா பெறுமதியான 50 Bed Side Locker கள் வைத்தியசாலை பொறுப்பாளர் Dr. MHM. தாரிக் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் டேவிட் பீரிஸ் மோட்டர்ஸ் நிறுவன மட்டக்களப்பு, அம்பாறை, பொலநறுவை இணைப்பாளர் திரு. சமிந்த, மட்டக்களப்பு பிராந்திய பொறுப்பாளர் திரு ஜீவங்கே, இஷாட் மோட்டர்ஸ் உரிமையாளர் திரு. நஜிமுதீன் ஆகியோரோடு, வைத்தியசாலையின் மெடிகல் சுப்றிண்டன் Dr. MHM. தாரிக், Dr காதர் பீவி, பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர், வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

சென்ற வருடமும் இந்நிறுவனம் மூலமாக 375000/- ரூபா பெறுமதியான நோயாளர் இருக்கைகளும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் மூலமாக இவ்வாறான வைத்தியசாலையின் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் அயராது உழைத்த சகோதரர்களான எம். ரிபாய் ஆசிரியர், தாதி உத்தியோகத்தர் ஏ. பைரூஸ் ஆகியோருக்கு வைத்தியசாலை நிருவாகம் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment