“அமைச்சர் றிசாத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் சதி”

lead-Rishad[1]வன்னி: அமைச்சர் றிசாத் பதியுதீன் வன்னி மாவட்ட மக்களுக்கு செய்யும் அபிவிருத்தி திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், சில அரசியல் வங்குரோத்து மற்றும் மக்களின் நிராகரிக்கப்பட்டவர்களை வைத்து பொய்யான கதைகளை புனைந்து அதனை ஒரு தனியான இலத்திரணியல் ஊடகத்துக்கு வழங்கி வருவதை வண்மையாக கண்டிப்பதாக வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் முஹம்மத் சரூக் தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இனம், மதம் பாராது சகல மக்களுக்கும் பணியாற்றுபவர் இதற்கு வவுனியா மாவட்ட மக்கள் சாட்சியாகவுள்ளனர்.

எந்திவத அறிமுகமும், முகவரியும் தெரியாத ஹூனைஸ் பாருக்கிற்கு கடந்த பொதுத் தேர்தலில் வாக்களிக்குமாறு எம்மை வலியுறுத்தியவர் அமைச்சர் றிசாத், அதன் மூலம் வன்னிக்கான இரு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அகில இலஙகை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்டது.அமைச்சர் றிசாதின் தயவால் அரசிலுக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்இஎமது காணிகள் சில தரப்புக்களால் கையகப்படுத்தப்பட்ட போதும்இஎமது மக்கள் இந்திய வீடமைப்பு திட்டத்திற்கு தெரிவான போதும், அவைகள் கிடைக்கச் செய்யப்படாமல் போன போதும் எங்கே போயிருந்தார் என கேட்கவிரும்புகின்றேன்.

இன்று வவுனியா மாவட்ட மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அரசியல் காலத்தில் தான் அதிகப்படியான நன்மைகளை அடைந்துள்ளனர் என்பதை பட்டியலிட்டு காட்டலாம்.எமது மக்களுக்கு அமைச்சர் றிசாத் கொண்டுவரும் அபிவிருத்திகளினால் மக்கள் இன்று அவரது கரத்தை பலப்படுத்திவருகின்றனர்.இதன் மூலம் ஏனைய கட்சிகழைள சார்ந்தவர்களின் வாக்குகளில் சரிவு கண்டுள்ளது இது தான் உண்மையாகும்.

Hunais MP

நான் பிரதி நிதித்துவப்படுத்தும் செட்டிக்குளம் பிரதேச சபையின் ஆட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பினது.இருந்த போதும் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் எமது பிரதச சபை சார்பில் தலைவர் உள்ளிட்ட நாங்கள் கேட்கும் அனைத்து அபிவிருத்திகளும் வழங்கப்படுகின்றன.

அமைச்சர் றிசாத் பதியுதீன் ஹூனைஸ் பாருக் எம்.பியின் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதாக ஒரு ஊடகம் தொடர்ந்தேச்சையாக செய்திகளை தேடித் தேடி ஒளிபரப்பு செய்துவருகின்றது.இந்த ஊடகம் தொடர்பில் மக்கள் நன்கறிவார்கள்.எம்மை பொருத்த வரை நாம் இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்களை மதிக்கின்றோம்.அவை தான் எமது பிரச்சினைகளையும் இதேவைகளையும் வெளிக்கொண்டுவந்து அதனை உரியவர்களின் பார்வைக்கு கொண்டு செல்கின்றது. அப்படிப்பட்ட ஊடகங்களுக்கு என்றும் எமது நன்றி இருக்கின்றது என்பதை இந்த தருணத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றோம்.

வவுனியா பாவற்குளம் இரண்டாம் யுனிட்டுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகள் ஏராளம் இப்பிரதேச மக்கள் இந்த பணிகளை நன்றியுடன் பார்க்கின்றனர்.ஒரு சிலர் அவர்களின் தனிப்பட்ட வியாபார லாபங்களுக்காக அமைச்சரிடத்தில் எதிர்பார்ப்புகளை கொண்ட போது, அது வழங்கப்படுவதன் மூலம் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிடும் இப்படிப்பட்ட விடயங்களுக்கு உதவி செய்ய முடியாது என்று அமைச்சர் றிசாத் தெரிவித்ததினாலேயே அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டினை இவரகள் சுமத்துகின்றனர்.

காடைத்தனமான அரசியல் பிழைப்பு நடத்த வேண்டிய தேவை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தேவையில்லை.அவர் வகித்து வந்த வன்னி புனர்வாழ்வு அமைச்சர், மீள்குடியேற்ற, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், தற்போதைய கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் பதவிகளில் இருந்து ஆற்றியுள்ள மக்களுக்கான அபிவிருத்திகள் எண்ணிலடங்கதாவை என தெரிவித்துள்ள் செடடிக்குளம் பிரதேச சபை முஹம்மத் சரூக், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் முஸ்லிம்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதகாவும் அவர் மேலும் கூறினார்.

Published by

Leave a comment