புதிதாக அமைக்கப்பட்ட கிறவல் வீதியை அகற்றக் கோரி NFGGயிடம் மக்கள் மகஜர்

unnamed1NFGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: முறையற்ற மற்றும் திட்டமிடப்படாத முறையில் அமைக்கப்பட்ட  கிறவல் வீதியினால் தாம் பெரிதும் அசௌகரிகங்களுக்கு உள்ளாவதாகத் தெரிவித்து மேற்படி வீதியினை உடனடியாக அகற்றித் தருமாறு கோரி NFGGயிடம் பிரதேச மக்கள் மகஜர் ஒன்றினைக் கையளித்தனர்.

அல் அமீன் வீதி 6ம் ஒழுங்கையில் வசித்துவரும் குடியிருப்பாளர்களின் முறைப்பாட்டையடுத்து 18.03.2015 மேற்படி வீதியினைப் பார்வையிடச் சென்ற NFGG பிரதிநிதிகளிடமே அப்பகுதி குடியிருப்பாளர்கள் இந்த மகஜரினைக் கையளித்தனர்.

காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான SH. பிர்தௌஸ், MAHM. மிஹ்ழார் மற்றும் PMGGயின் சூறாசபை உறுப்பினர்களான MM. அமீர் அலி ஆசிரியர், MYM. சரீப், KM. புஹாரி ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.

இதன்போது இதனை சரி செய்யும் வகையில் இதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக NFGG பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

unnamed1

unnamed

Published by

Leave a comment