-
கட்டாரில் ‘பிரார்த்தனை’ ஒருவிரிவான விளக்கம் – (தொடர்) என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அல் மனார்: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி எதிர்வரும் 19-03-2015 வியாழக்கிழமை இரவு 08.30 மணிக்கு கட்டார் அல் மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட எந்த தடையும் இல்லை – மனோவுக்கு ஜனாதிபதி மைத்திரி உத்தரவாதம்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை தடை செய்வது சட்ட விரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
-
எனது பெயரில் இயக்கப்படுவதாக சொல்லப்படும் முகநூல் பக்கங்கள் போலியானவை – முஹம்மட் முஸ்தபா – ஐ.தே.கட்சி அமைப்பாளர்
முஹம்மட் முஸ்தபா காத்தான்குடி: எனது பெயரைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முகநூல் பக்கங்கள் தொடர்பாக நான் அறிகிறேன். முகநூல் பக்கங்கள் எதனையும் நான் எனது சொந்தப் பெயரிலோ அல்லது வேறு புனைப் பெயர்களிலோ இற்றைவரை பாவிக்காத நிலையில் எனது பெயருக்கு களங்கம் உருவாக்குவதற்காகவே சில விசமிகள் இந்த கீழ்த்தரமான செயலை செய்திருப்பதாகவும் நான் நம்புகின்றேன்.
-
“தற்போது 500 மில்லியனை வைத்துகொள், போதவில்லை என்றால், பசிலை சந்தித்து ஓரிரு ஒப்பந்தங்களை போட்டுக்கொள்”: …. அசாட் சாலி
லண்டன்: கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவரை குடும்பத்துடன் அழிக்க போவதாக அன்றைய அரசாங்க தரப்பின் உயர்மட்டம் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட முஸ்லிம் தலைவரை தொடர்பு கொண்ட அன்றைய அரசாங்கத்தின் உயர்மட்டத்தை சேர்ந்த ஒருவர்.
-
சுஊத் பல்கலைக்கழக தொலைக் கல்வி நிறுவனத்தின் தொலைக்கல்வி கிளையொன்று மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் ஆரம்பிக்க உடன்படிக்கை கைச்சாத்து
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சவூதி அரேபிய நாட்டின் றியாத் நகரிலுள்ள அல் இமாம் சுஊத் பல்கலைக்கழக தொலைக் கல்வி நிறுவனத்தின் கிழக்காசியாவுக்கான தொலைக்கல்வி கிளையொன்று விரைவில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
-
காத்தான்குடி கல்விப் பிரிவுக்கான வருடாந்த விளையாட்டு விழாவில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை முதலிடம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கல்விப் பிரிவுக்கான வருடாந்த விளையாட்டு விழா 16-03-2015 நேற்று திங்கட்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
-
புலமைப் பூக்களுக்கு புகழாரம்: மாபெரும் பரிசளிப்பு விழா
பைரூஸ் முஹமட் சாய்ந்தமருது: துருவம் ஊடக வலையமைப்பு இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து கடந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மாபெரும் பரிசளிப்பு விழாவொன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
-
வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மகஜர்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: இலங்கை முஸ்லிம்களுக்கும், இந்திய முஸ்லிம்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டி இலங்கையில் இந்திய அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தப்படும் இந்திய வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம்களுக்கு சரியான ஒதுக்கீடு வழங்கப்படாமை தொடர்பில் வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மகஜர் ஒன்றினை கையளித்ததாக ஒன்றியத்தின் தலைவர் அஷ்-ஷெய்க் முபாறக் (றசாதி) தெரிவித்தார்.
-
ஆபிரிக்காவில் அல்-கிம்மா
– எம்.ரீ.எம்.பாரிஸ் கல்குடா: கல்குடா அல்-கிம்மா நிறுவனமானது, இலங்கையின் பல பகுதிகளிலும் தங்களது அபிவிருத்திப்பணிகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் தொடரில், தங்களது சேவையினை இலங்கை மற்றுமன்றி இந்தியா, ஆபிரிகா போன்ற நாடுகளிலும் மேற்கொள்வதற்கான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.
-
இக்ரா பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2015 சர்வதேச மகளிர் தின நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இக்ரா பெண்களுக்கான இஸ்லாமிய அழைப்பு மையத்தினால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘மனித நாகரிக வளர்ச்சிக்கு முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு’ எனும் மகுடம் தாங்கி பெண்களுக்கான மகளிர் தின நிகழ்வு ஒன்று 2015-03-13 வெள்ளிக்கிழமை மாலை பிஸ்மி தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளர் சசிதரன் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்
காத்தான்குடி: காத்தான்குடியைத் தளமாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘வார உரைகல்’ பத்திரிகை ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வை, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சசிதரன் என்பவர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.