முதலாவது காலிறுதிப் போட்டி: நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்

South-Africa-vs-Sri-Lanka-ICC-Cricket-World-Cup-Quarter-Finals-Match-1-Live-Streaming-HDசிட்னி: உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதலாவது காலிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் இன்று போட்டியிடவுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான இலங்கை ரசிகர்களை பார்வையாளர்களாகக்  கொண்டிருக்கும் சிட்னி மைதானத்தில், இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்ககார இப்போட்டியிலும் சதம் அடித்து சாதனை படைப்பார் என உலகெங்கிலும் உள்ள அணைத்து கிரிக்கெட் ரசிகர்களினதும் எதிர் பார்ப்பாக இருக்கிறது.

தென் ஆபிரிக்கா அணி சார்பாக, நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹசீம் அம்லா மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர்களான அணித்தலைவர் எ பி டி வில்லியர்ஸ், டியூபிலஸி, டேவிட் மில்லர் ஆகியோருடன் பலமிக்க அணியாக இன்று களமிறங்க உள்ளனர்.      

இப்போட்டியில் பல சாதனைகள் இடம்பெறும் என உலக கிரிக்கெட் பிரபலங்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  

South-Africa-vs-Sri-Lanka-ICC-Cricket-World-Cup-Quarter-Finals-Match-1-Live-Streaming-HD

Published by

Leave a comment