Category: Your Kattankudy
-
‘பிறை பார்த்தலும் பெருநாளைத் தீர்மாணித்தலும்’ ஜூம்ஆ பேருரையின் ஒலிப்பதிவு
– இஸ்லாமிக் சென்ரர் தலைப்பு: பிறை பார்த்தலும் பெருநாளைத் தீர்மாணித்தலும் உரை: அஷ்ஷெய்க். எம்.சீ.எம். றிஸ்வான் (மதனி) இடம்: ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி
-
மக்களுக்காக அயராது பணியாற்றுபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – வேலணை கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்
– பழுளுல்லாஹ் பர்ஹான் வேலணை: மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வருவது மட்டுமல்லாமல் எம்மோடு இருந்து எமக்காக அயராது பணியாற்றி வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என வேலணை கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் அப்புராசா தெரிவித்துள்ளார்.
-
நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயகர சூழ்நிலைக்கு விரைவில் தீர்வு தருவேன் என ஜனாதிபதி உறுதி-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் (பிரத்தியேக நேர்காணல்) காத்தான்குடி: நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயகர சூழ்நிலைக்கு விரைவில் தீர்வு தருவேன் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள தற்கால சூழ்நிலையில் முஸ்லிம்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பில் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதனைத் தெரிவித்தார்.
-
மற்ற மனிதர்களை மதிக்காத சூழலில் எவரும் இறைவனுடன் எந்த நல்ல உறவையோ,தொடர்பையோ ஏற்படுத்தவும் வளர்த்துக் கொள்ளவும் முடியாது’- பாப்பரசரின் ஈத் முபாறக் வாழ்த்து!
– பழுளுல்லாஹ் பர்ஹான் (வாழ்த்து இணைப்பு) வத்திக்கான்: ‘மற்ற மனிதர்களை மதிக்காத சூழலில் எவரும் இறைவனுடன் எந்த நல்ல உறவையோ,தொடர்பையோ ஏற்படுத்தவும் வளர்த்துக் கொள்ளவும் முடியாது என வத்திகானிலிருந்து பாப்பரசர் 1ம் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஹிஜ்ரி 1434 புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் உலக வாழ் சகல முஸ்லிம்களுக்கும் வத்திகானிலிருந்து பாப்பரசர் 1ம் பிரான்சிஸ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்திலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
வடக்கு கிழக்கில் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் இந்திய உளவாளிகள்
கொழும்பு: இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் இந்திய உளவாளிகள் ஊடுருவியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து வடக்கு கிழக்கு பகுதிகளில் சஞ்சரித்து இவ்வாறு உளவுத் தகவல்கள் திரட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
கிண்ணியாவில் தலைப்பிறை பார்த்தது தொடர்பாக கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப்
– ரைஸ் கிண்ணியா: 2013.08.07 ஆந் திகதி தலைப்பிறை பார்க்கும் படி அகில இலங்கை ஜம்இயதுல் உலமா விடுத்த வேண்டுகோளையடுத்து அன்று மாலை கிண்ணியாவில் தலைப்பிறை பார்த்தது ஊர்ஜீதப்படுத்தப்பட்ட விடயம் சம்பந்தமாக பல செய்திகள் செளியான நிலையில் தலைப்பிறை சம்பந்தமாக கிண்ணியா நகரபிதா என்ற வகையில்
-
விமானங்கள் வராமையால் கட்டனங்களைக் குறைக்கும் ராஜபக்ஷ விமான நிலையம்!
மத்தல: மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவையை விஸ்தரித்து பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. அம்பாந்தோட்டை – மத்தல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
-
ஆடிப்போன றிஸ்வி முப்தியும், வக்காலத்து வாங்கும் சில பிரமுகர்களும்
– இஸ்மாயீல் ஏ. முனவ்வர் கொழும்பு: ஓர் பெருநாளைப் புறக்கணித்து, முஸ்லிம் சமூகத்தை பாதாளத்துக்குத் தள்ளிவிட்டு, இச்சமூகத்துக்கு ஓர் பத்திரிகை மாநாட்டை அல்லது வானொலிப் பேச்சை அறிவித்து விட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்ற அபிப்பிராயத்தில் இருந்த அ.இ.ஜ.உலமாவின் தலைவரின் திட்டம், இந்நாட்டில் இந்தளவு பாதிப்பையும், விமர்சனங்களைளயும் தோற்றுவிக்கும் என்பதை கனவிலும் ரிஸ்வி முப்தியும் அவரது நம்பிக்கைக்குரியவர்களும் நினைத்திருக்கமாட்டார்கள்.
-
‘அல்லாஹ்வின் அருளால் இம்முறை நோன்புப் பெருநாள் பஸார் வெற்றிகரமாக இடம்பெறுகிறது’ – தவிசாளர் அஸ்பர்
-பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஹிஜ்ரி 1434ம் ஆண்டு நோன்புப் பெருநாள் பஸார் வழமைக்கு மாறாக இம்முறை காத்தான்குடி ஆற்றங்கரை குபாப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக வெற்றிகரமாக இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.
-
ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரின் அறிக்கைக்கான கிண்ணியா உலமா சபையின் விளக்கம்
கிண்ணியா: கிண்ணியாவில் ஷவ்வால் தலைப்பிறை கண்டு நோன்புப் பெருநாளை 08.08.2013 வியாழன் அன்று கொண்டாடியது தொடர்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள், அதே தினம் பிற்பகல் 01.08 மணிக்கு ஆற்றிய உரையில் காணப்படும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் தொடர்பாக கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
-
கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர் வரலாற்றில் முன்னுதாரணமாவார்!
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் -ஜுனைட் நளீமியின் கட்டுரைக்கான பதில் கட்டுரை: அண்மையில் சில ஊடகங்களில் வெளியான ஜுனைட் நளீமி எழுதிய ‘வட மாகாணத் தேர்தல்: கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர் காட்சிப் பொருளா? பலிக்கடாவா?’ எனும் தலைப்பிலான கட்டுரையை வாசிக்கக் கிடைத்தது. அவரது கருத்துக்கள் தொடர்பில் எனது கருத்துக்கள் சிலவற்றையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
-
முதன் முறையாக காத்தான்குடி குபா ஆற்றங்கரைப் பகுதியில் பெருநாள் பஸார் ஆரம்பித்து வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வழமையாக காத்தான்குடி கடற்கரை வீதியில் இடம்பெறுகின்ற பெருநாள் பஸாரை இம்முறை காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் நடத்த காத்தான்குடி நகர சபை தீர்மானித்ததையடுத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00மணிக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் நோன்புப் பெருநாள் பஸார் ஆரம்பித்து வைக்கப்பட்டது.