‘அல்லாஹ்வின் அருளால் இம்முறை நோன்புப் பெருநாள் பஸார் வெற்றிகரமாக இடம்பெறுகிறது’ – தவிசாளர் அஸ்பர்

azfar-பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஹிஜ்ரி 1434ம் ஆண்டு நோன்புப் பெருநாள் பஸார் வழமைக்கு மாறாக இம்முறை காத்தான்குடி  ஆற்றங்கரை குபாப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக வெற்றிகரமாக இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வழமைக்கு மாறாக இம்முறை ஆற்றங்கரை குபாப் பகுதியில் நடாத்துவதற்கு தீர்மானித்த போது பல்வேறு எதிர்ப்புக்கள் வந்த போதும் இதை நடாத்துவதாக உத்தேசித்து குறித்த பகுதி மக்கள்,அப்பகுதி அமைப்புக்கள், நகர சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரின் முழு ஒத்துழைப்புடனும் எனது முயற்சியுடனும் அல்லாஹ்வின் உதவியால் குறித்த பெருநாள் பஸார் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு எனக்கு உதவிய வல்ல இறைவன் அல்லாஹ்வுக்கும் அடுத்ததாக எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய குறித்த பகுதி மக்கள்,அப்பகுதி அமைப்புக்கள்,நகர சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

azfar

Published by

Leave a comment