கொழும்பு: இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் இந்திய உளவாளிகள் ஊடுருவியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து வடக்கு கிழக்கு பகுதிகளில் சஞ்சரித்து இவ்வாறு உளவுத் தகவல்கள் திரட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த உளவாளிகளே இவ்வாறு ஊடுருவியிருப்பதாக விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்பும் நோக்கில் இவ்வாறு குறித்த நபர்கள் உளவுத் தகவல்களை திரட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடமிருந்து திரட்டப்படுகின்றது. அறுவடை செய்தல், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போர்வையில் உளவுத் தகவல்கள் திரட்டப்படுகின்றன. வீசா காலம் முடிவடைந்ததும் இவர்கள் நாட்டில் தங்கியிருக்கின்றனர்.tw
Leave a comment