காத்தான்குடி: வழமையாக காத்தான்குடி கடற்கரை வீதியில் இடம்பெறுகின்ற பெருநாள் பஸாரை இம்முறை காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் நடத்த காத்தான்குடி நகர சபை தீர்மானித்ததையடுத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00மணிக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் நோன்புப் பெருநாள் பஸார் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பெருநாள் பஸாரில் பாதாள கிணற்றுக்குள் பயங்கர மோட்டார் சைக்கிள், சாண்டோர் சங்கரதாஸ் சாகச நிகழ்வு, சிறுவர்களுக்கான புகையிரதம், கிறுக்கு ஊஞ்சல், கடைகள், குதிரை சவாரி உள்ளிட்ட சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பரின் தலைமையில் இடம்பெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி நகர சபை பிரதித் தவிசாளர் ஜெஸீம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஷியாட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள்,உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பெருமளவிலான ஆண்கள், சிறுவர்கள் என பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a comment