Category: Your Kattankudy
-
கல்வியில் புலமை காட்டிய மாணவர்களையும் கற்பித்த ஆசான்களையும் கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: கல்வியில் புலமை காட்டிய மாணவர்களையும் கற்பித்த ஆசான்களையும் கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வு வெள்ளியன்று ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளரும் ஏறாவூர் நல்லிணக்கம் மற்றும் சமூக வலுவூட்டலுக்கான நிலையத்தின் தலைவருமான எம்.எஸ்.எம். நஸீரின் ஏற்பாட்டில் நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது.
-
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தயட்ட செவன தேசத்திற்கு நிழல் கொடுக்கும் தேசிய மரநடுகைத் திட்டம்
பழுளுல்லாஹ் பர்ஹான் கரடியனாறு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தயட்ட செவன தேசத்திற்கு நிழல் கொடுக்கும் தேசிய மரநடுகைத் திட்டம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
-
சீனன்குடா மீன்பிடி நிலையத்திற்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் திடீர் விஜயம்-குறைநிறைகள் தொடர்பில் ஆராய்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: திருகோணமலையில் உள்ள சீனன்குடா மீன்பிடி நிலையத்திற்கு கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி,கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்; நேரில் சென்று பார்வையிட்டு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
-
பாலமுனை புதிய வீட்டுத்திட்ட பள்ளிவாயலுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு
முகம்மட் சஜி பாலமுனை: பாலமுனை பிரதேசத்தில் அப்பிரதேச புதிய வீட்டுத்திட்ட பள்ளிவாயலுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டது. ஹிறா பௌன்டேசனின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட இப்பொருட்களை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு வழங்கிவைத்தார்.
-
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி நிதிகளுக்குமிடையில் சந்திப்பு
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு: இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி நிதிகளுக்குமிடையில் இன்று (2013.11.16) சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு தாஜ் சமூத்திராவில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
-
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ரஸ்ய அழகிகளின் நடனம், அகில இலங்கை உலமா சபை கண்டனம்!
ஏ.எம். சமீம் ஒலுவில்: இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாரை மாவட்டத்தில், 90 வீதமான முஸ்லிம் மாணவர்களோடும், மிக அதிகமான முஸ்லிம் விரிவுரையாளர்கள், ஊழியர்கள் கடமைபுரியும் ஒலுவிலுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 07ம் திகதி வியாழன் மாலை முழுக்க முழுக்க ரஷ்ய நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அந்நாட்டு இளம் பெண்களும், ஆடவர்களும் கலந்து நடனமாடிய நடன அரங்கேற்றம் ஒன்று நடைபெற்றுள்ளது.
-
மாகாண விவசாய அமைச்சின் ‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை விழா
பழுளுல்லாஹ் பர்ஹான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை விழா 15.11.2013 வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண அமைச்சுக்குரிய நிர்வாக வளாகத்தில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை .அபிவிருத்தி, மீன்பிடி,கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.
-
அதிகாலை ஆண்கள்
MSM. பாயிஸ் (இந்த ஆக்கம் எனது உறவினர் ஒருவர் மூலமாகக் கிடைத்து. இதை இணையதள வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைக்றேன். ) அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையைநிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள் மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.
-
செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் ‘உயிர் காக்க உதவுவோம் நமக்காக நாமாவோம்’; இரத்ததான நிகழ்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் காரியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
-
காலி இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரியின் 2014ம் ஆண்டு புதியமாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை
பழுளுல்லாஹ் பர்ஹான் காலி: காலி இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரி 2014 ஜனவரியில் ஆரம்பமாகும் புதியகல்வியாண்டின் ஷரீஆ(மௌலவி ஆலிம்),அல்குர்ஆன் மனனம் ஆகிய இருபகுதிகளின் முதலாம் ஆண்டிற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01-12-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக காலி
-
தாறுல் ஹதீஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரிக்கு சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாறுல் ஹதீஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரிக்கு சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியில் அதன் தலைவர் எம்.சீ.எம்.றிஸ்வான்(மதனி) தலைமையில் கடந்த புதன்கிழமை மாலை நடைபெற்றது.
-
பரிசை நம்பி பணத்தை இழக்காதீர்கள்-டயலொக் வாடிக்கையாளர்கள் அவதானம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: டயலொக் நிறுவனத்தின் ‘லோர்ட் ஒஃப் த ரீலோர்ட்’ பிரிவிலிருந்து பேசுவதாகவும் பல இலட்சக்கணக்கான பரிசுகள் விழுந்துள்ளதாக கூறி டயலொக் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நிலைமைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.