Category: Your Kattankudy
-
பதக்கம் அணிவிப்பும் பாரட்டு நிகழ்வும்
– பஹ்மி யூஸூப் திருகோணமலை: சென் ஜோன்ஸ் படையணியினரின் 2011 மற்றும் 2012 ம் ஆண்டிற்கான தேசிய பாசறையில் வெற்றியீட்டிய திருகோணமலை மாவட்ட படையணியிற்கான தங்கப்பதக்கம் அணிவிப்பதும் பாரட்டு நிகழ்வும் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியில் கடந்த 13.11.2013ஆம் திகதி இடம்பெற்றது.
-
சட்டவிரோதமாக தங்கியிருப்போரை சவூதியிலிருந்து வரவழைக்க நடவடிக்கை
கொழும்பு: சவூதி அரேபியாவில் தங்கியுள்ள எந்தவொரு இலங்கையரும் கைதாகவில் லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அங்குள்ளவர்களை விடுவிப்பது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான அவசிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
-
போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்படின் பாரபட்சம் பாராது கடும் தண்டனை
* பயங்கரவாதத்தை தோற்கடிப்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது * புலம்பெயர் தமிழர்களுடன் பேச தயார்-நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கக்கூடாது * பிரிட்டிஷ் பிரதமரிடம் நானும் சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன்
-
சனிக்கிரகம் : நாசாவின் புதிய படங்கள்
நியுயோர்க்: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, சனிக்கிரகத்தை ஆராய அனுப்பிய , கேசினி விண்கலன், ஜூலை 19 2013, எடுத்த சில அரிய புகைப்படங்களை இப்போது வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் , ஜூலை 19ம் தேதி ஏற்பட்ட சனிக்கிரகத்தால் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது கேசினி விண்கலனில் இருந்த கேமெராக்களால் எடுக்கப்பட்டன.
-
பாராளுமன்ற உறுப்பினர் P.அரியநேந்திரன் அவர்களுக்கு ஒரு மடல்!
MSM.பாயிஸ் – சவூதி அரேபியா கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் P.அரியநேந்திரன் அவர்களே! காத்தான்குடி பொலிஸ் நிலையம் மஞ்சந்தொடுவாய் கிராமத்தில் அமைந்துள்ளதாகவும் அதை மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென தாங்கள் மட்டு. மாவட்ட செயலாளர் திருமதி. சாள்ஸுக்கு எழுத்து மூலமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் மிக விரைவில் மட்டக்களப்பு புகையிரத நிலையம்
-
வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் மற்றும் பிரதம கொறடா ஆகியோர்களின் பெயர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: நடை பெற்று முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் எதிர்கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காணப்படுவதால் எதிர்கட்சி தலைமைப் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனுக்கும், எதிர்கட்சியின் பிரதம கொறடா பதவியினை ஐக்கிய முன்னணியில் போட்டியிட்ட அகில
-
எவருடனும் பேசத் தயார்- ஆனால் நாட்டைப் பிரிக்க இடமளியேன்- ஜனாதிபதி
கொழும்பு: நாங்கள் என்றும் திறந்த மனதுடனேயே உள்ளோம் எங்களுக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எவருடனும் நாம் பேசத் தயார். ஆனால் நாட்டைப் பிரிக்க ஒருபோதும் இடமளியேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
-
பொதுநலவாய அரச தலைவர்கள் மகாநாடு நாளை ஆரம்பம்
கொழும்பு: பொதுநலவாய அரச தலைவர்கள் மகாநாடு நாளை (15) காலை கொழும்பு தாமரை தடாக மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கலையரங்கத்தில் வைபவரீதியாக ஆரம்பமாகும். 53 பொதுநலவாய அங்கத்துவ நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெறும்.
-
இளவரசர் சார்ள்ஸ் இலங்கை வந்தார்!
கொழும்பு: பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கோன்வேல் சீமாட்டி ஆகியோர் இன்று (14) இன்று மாலை இலங்கையை வந்தடைந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விஷேட விமானம் மூலம் வந்திறங்கிய
-
கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் களத்தில் சச்சின் டெண்டுல்கர்
மும்பை: இந்தியா உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களின் ஒருவரும், அந்நாட்டின் மிகப்பெரும் விளையாட்டு நாயகருமான, சச்சின் டெண்டுல்கருக்கு, பிரியாவிடை தந்துகொண்டிருக்கிறது. சச்சின், தனது கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடிக்கொண்டிருக்கிறார்.
-
மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் வியட்நாம் தூதுவர் டொன் சிங் தங் இற்கும் இடையிலான சந்திப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, உற்பத்தி,கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் இலங்கையில் உள்ள வியட்நாம் தூதுவர் டொன் சிங் தங் இற்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை 14.11.2013 கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவராயலத்தில் இடம்பெற்றது.
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு இனத்தின் எதிர்காலத்தை மட்டும் கவனத்தில் கொண்டு செயற்படுறது – றிப்கான் பதியுதீன்
அபூ அஸ்ஜத் இலங்கையில் இடம் பெறும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பான பொதுநலவாய மாநாட்டில் இந்திய தரைலவர்கள் பங்கேற்கக் கூடாது என்றும், அவ்வாறு அவர்கள் கலந்து கொள்வார்கள் என்றால் அது இலங்கை தமிழர்களின் தமிழீழ கோறிக்கையினை நிராகரிக்கும் செயலென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துவருது ஒரு இனத்தின் எதிர்காலத்தை மட்டும் கவனத்தில் கொண்டு அவர்கள் செயற்படுவதாக