Category: Your Kattankudy
-
23 ஆவது பொதுநலவாய உச்சி மாநாடு கோலாகல ஆரம்பம் கலாசார பாரம்பரியங்களுடன் தலைவர்கள் வரவேற்பு
கொழும்பு: பொதுநலவாய அரச தலைவர்களின் 23வது உச்சி மாநாடு நேற்று கோலா கலமாக கொழும்பில் ஆரம்பமானது. உச்சி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கிலும் அரச தலைவர்கள் கலந்து கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ அமர்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் இடம்பெற்றன.
-
இணையத்தில் உலவும் குழந்தைகள் ஆபாசப்படங்கள்: ஆசிரியர், பெற்றோர் உட்பட 348 பேர் கைது
– SHM டொராண்டோ: இணையத்தில் குழந்தைகள் ஆபாசப் படத்தை வெளியிட்டதாகக் கூறி அமெரிக்கா, ஸ்பெயின், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மொத்தமாக 348 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளத்தில் வெளிவருவது குறித்து தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கனடா நாட்டில் செயல்பட்டுவரும் அசோவ்பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது பொலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
-
‘யாழ்ப்பாணத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கேமரன்’
யாழ்: பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட பல தரப்பினரையும் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனாலும், உள்ளூர் பத்திரிகையாளர்களால் அவரைச் சந்திக்க முடியவில்லை.
-
செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான நிகழ்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான நிகழ்வு நாளை சனிக்கிழமை இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் காரியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ளதாக செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி கிளை தொண்டர் இணைப்பாளர் சலீம் தெரிவித்தார்.
-
காங்கேயனோடை கல்வி அபிவிருத்தி மையத்தினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்
முகம்மட் சஜி காங்கேயனோடை: காங்கேயனோடை பிரதேசத்தில் அப்பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பாடசாலை தவிர்ந்த மேலதிகமான நேரங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் காங்கேயனோடை கல்வி அபிவிருத்தி குழுவின் வேண்டுகோளின் பேரில் பொருளாதார பிரதியமைச்சர்
-
இன்றைய ஜூம்ஆ ஒலிப்பதிவு
– அகமட் ஆசிர் ஒலிப்பதிவு – KKY YOUTH இடம்: பதுரியா ஜும்ஆப்பள்ளி வாயல் புதிய காத்தான்குடி 15.11.2013 பிரசங்கம்: அஷ்ஷெய்க் ஷாஜஹான் (பலாஹி)
-
இரண்டு கோடி ரூபா செலவில் ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னா முஹம்மதிய்யாவின் அல் மர்கசுல் இஸ்லாமி இஸ்லாமிய நிலையம் பாலமுனையில் திறப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: பறகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னா முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் சவூதி அரேபிய தனவந்தர் ஒருவரின் 2கோடி ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட பாலமுனை அல் மர்கசுல் இஸ்லாமி இஸ்லாமிய நிலைய திறப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையுடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.
-
மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை திரு.பொன்னையா ஜோஸப், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு தலைவர் மாமாங்கராஜா,மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த
-
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ‘தயட்ட செவண’ தேசிய மர நடுகை விழா
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை விழா சுப நேரம் காலை 10.03மணிக்கு காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப்
-
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ‘தயட்ட செவண’ தேசிய மர நடுகை விழா காத்தான்குடியில்..
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் ‘தயட்ட செவண’ தேசிய மரநடுகை விழா சுப நேரம் காலை 10.03மணிக்கு புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்றது.
-
13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கமும், சிறுபான்மை மக்களும் புரிந்துணர்வுடன்; செயல்படுவது அவசியமாகும்-இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கமும், சிறுபான்மை மக்களும் புரிந்துணர்வுடன்; செயல்படுவது அவசியமென இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், ஸ்ரீ லங்கா முஸ்லிம் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தம்மைச் சந்தித்து கலந்துரையாடிய அக் கட்சியின் உயர்மட்ட குழுவினரிடம் தெரிவித்தார்.