கல்வியில் புலமை காட்டிய மாணவர்களையும் கற்பித்த ஆசான்களையும் கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வு

???????????????????????????????பழுளுல்லாஹ் பர்ஹான்

ஏறாவூர்: கல்வியில் புலமை காட்டிய மாணவர்களையும் கற்பித்த ஆசான்களையும் கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வு வெள்ளியன்று ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளரும் ஏறாவூர் நல்லிணக்கம் மற்றும் சமூக வலுவூட்டலுக்கான நிலையத்தின் தலைவருமான எம்.எஸ்.எம். நஸீரின் ஏற்பாட்டில் நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது.

இவ்வாண்டு இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஏறாவூர் றஹுமானியா வித்தியாலத்தைச் சேர்ந்த ஏ.ஜே. அமான் அஸ்கர் என்ற மாணவன் 191 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல பரீட்சையில் முஸ்லிம் மாணவர் மத்தியில் முதலாமிடத்திலும், மாவட்டத்தில் இரண்டாமிடத்திலும், வலயக் கல்வி மட்டத்தில் முதலாமிடத்திலும் தேர்வடைந்துள்ளார்.

இவரையும் அடுத்தடுத்து தேர்வடைந்த ஏனையோரையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி பரிசளித்து கௌரவித்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நிர்மாண கிராமிய மின்சார, வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் இடர் நிவாரண சேவைகள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீரலி, கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான எம்.எஸ். சுபைர் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment