கரடியனாறு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தயட்ட செவன தேசத்திற்கு நிழல் கொடுக்கும் தேசிய மரநடுகைத் திட்டம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
பொலிஸ் பொறுப்பதிகாரி சி. மஹலேகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேமரட்ண மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்றைய தினம் சுப வேளையில் சுமார் 40 பழமரங்கள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment