தாறுல் ஹதீஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரிக்கு சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு

20131114_182629[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி தாறுல் ஹதீஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரிக்கு சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியில் அதன் தலைவர் எம்.சீ.எம்.றிஸ்வான்(மதனி) தலைமையில் கடந்த புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சவூதி அரேபிய மன்னர் காலித் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் சஃத் அஸ்ஸர்ஹானியின் நிதியொதுக்கீட்டிலேயே குறித்த தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது காத்தான்குடி தாறுல் ஹதீஸ் நிறுவனத்தின் காத்தான்குடிக் கிளைப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.சி.ஏ நாஸர்(ஜமாலி) தளபாடங்களை மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் மதனியிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் செய்னுலாப்தீன்(மதனி),கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்,மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர்கள்,அதன் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த இத்தளபாடங்கள் சவூதி அரேபிய மன்னர் காலித் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் சஃத் அஸ்ஸர்ஹானி காத்தான்குடிக்கு விஜயம் செய்த போது அவரிடம் மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரி விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவே வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

20131114_182629[1]

014[1]001[1]

Published by

Leave a comment