Category: Your Kattankudy
-
நிமோனியாவை குணப்படுத்தும் சில இயற்கை வைத்தியங்கள்
– SHM இயற்கை வைத்தியம் என்று சொன்னால் அது வேஸ்ட் என்று பலர் சொல்வார்கள். ஏனெனில் இயற்கை வைத்தியத்தின் மூலம் எதையும் விரைவில் குணப்படுத்த முடியாது என்பதாலேயே தான். ஆனால் இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், நோயானது உடனே குணமாகாவிட்டாலும், நாளடைவில் முற்றிலும் குணமாகிவிடும். அதுமட்டுமின்றி, இயற்கை வைத்தியத்தினால் எந்த ஒரு பக்க விளையும் ஏற்டாது.
-
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய ஆணைக்குழு
யாழ்ப்பாணம்: வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் என்பவற்றிற்காக ஆணைக் குழுவொன்றை அமைக்க இருப்பதாக முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
-
பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்: முத்தையா முரளிதரன்
கொழும்பு: இலங்கையில் யுத்தம் முடிவடை யும் காலகட்டத்தில் வடக்கில் பொதுமக்கள் காணாமல் போனார்கள் என்ற குற்றச்சாட்டு சம்பந்தமாக உடனடியாக விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து என்று இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் ஆட்டக்காரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
-
முகைதீன் மூத்தோர் சங்கம் சிறந்த கிராமிய முதியோர் சங்கமாகத் தெரிவு
வார உரைகல் காத்தான்குடி: 2013ம் ஆண்டிற்கான சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட சிறந்த கிராமிய முதியோர் சங்கத்தினை தெரிவு செய்யும் போட்டியில் புதிய காத்தான்குடி கிழக்கு 167 டீ கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கி வரும் முகைதீன் மூத்தோர் சங்கம் இரண்டாவது இடத்தினைப் பெற்று சிறந்த கிராமிய முதியோர் சங்கமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஷ்வரனுக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு
PMGG ஊடகப்பிரிவு யாழ்ப்பாணம்: வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஷ்வரனுக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று யாழ் நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
-
‘மௌனத்தின் பின்னரான கவிதை’ நூல் வெளியீடு
ரைஸ் கிண்ணியா: நிகழ் காலம் சஞ்சிகையின் ஆசிரியர் நாசிக் மஜீதின் மௌனத்தின் பின்னரான கவிதை நூல் வெளியீடு நேற்று நூலாசிரியர் நாசிக் மஜீத் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-
கத்தார் உலகக்கோப்பை : ‘தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்’
டோஹா: கத்தாரில் 2022ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுவரும் தொழிலாளர்கள் பாரிய அளவில் சுரண்டப்படுவதாக கத்தார் கட்டுமான நிறுவனங்கள் மீது மனித உரிமை நிறுவனமான, அம்னெஸ்டி இண்டர்னேஷனல் குற்றம் சாட்டியிருக்கிறது.
-
நிந்தவூரில் நடந்ததென்ன?
நிந்தவூர்: அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்த பிரதேசத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பொது மக்களுக்கும் சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்குமிடையிலான முறுகல் நிலையின் போது நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள்
-
ஜெனீவாவில் எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்ள தயார்!
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு! கொழும்பு: ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
-
கட்டார் வைரஸ் காய்ச்சல்: வாழைச்சேனை சகோதரர் மரணம்
DHA-86 டோஹா: கட்டாரில் தொழில்புரிந்து வந்த மட்டக்களப்பு, வாழைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட முஸ்லிம் சகோதரர் ஒருவர் நேற்று மாலை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனக்கு சில நாட்களாக ஏற்பட்டிருந்த தொடர் காய்ச்சலை அடுத்து, வைத்தியசாலைக்கு அவரது நண்பர்களால் கொண்டு செல்லப்படும்போது, அங்கு உயிரிழந்துள்ளார்.
-
பணம் பெற்றுக் கொண்டு விளையாடிய சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருதா?:
– SHM டெல்லி: பணம் பெற்றுக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய சச்சினுக்கு எதற்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியாவின் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி.நேற்று முன் தினம் தனது கடைசிப் போட்டியை ஆடினார் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்.