காலி: காலி இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரி 2014 ஜனவரியில் ஆரம்பமாகும் புதியகல்வியாண்டின் ஷரீஆ(மௌலவி ஆலிம்),அல்குர்ஆன் மனனம் ஆகிய இருபகுதிகளின் முதலாம் ஆண்டிற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01-12-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக காலி
இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன்(பஹ்ஜி) தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரிகளில் அழைப்புக் கடிதம் கிடைத்தவர்கள் அனைவரும் குறித்தநேரத்தில் சமுகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களும் பின்வரும் தகைமைகள் காணப்படின் இந்நேர்முகப் பரீட்சையில் தகுந்த அத்தாட்சிகளுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
தகைமைகள்:-
ஷரீஆப் பிரிவு :
15 வயதுக்குட்பட்ட தற்பொழுது பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்விகற்கும் அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்களாகயிருத்தல் வேண்டும்.
அல்குர்ஆன் மனனப் பிரிவு:
தற்போதுகுறைந்தது 06 ம் ஆண்டில் கல்விகற்கும் 11-13 வயதுக்கிடைப்பட்ட அல்குர்ஆனை சரளமாக ஓதத்தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்பவர்கள் தமது பிறப்பு அத்தாட்சிப்பத்திரம்,பாடசாலை முன்னேற்ற அறிக்கை கல்விச் சான்றிதழ்கள் என்பவற்றுடன் சமுகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பு :இங்கு ஷரீஆப் பிரிவு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன் க. பொ. த. சா.த, உ.த பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு அதிபர்,இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரி,த.பெ.இல:105,ஹிரிம்புற குறுக்கு வீதி,காலி என்ற முகவரியூடாகவோ அல்லது 0912243672, 0777921418 தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ 0912222037 தொலைநகல் இலக்கமூடாகவோ தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

Leave a comment