Category: Your Kattankudy
-
எரிகிறது நிந்தவூர்
நிந்தவூர்: நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை கண்டித்து இன்று நிந்தவூர் பிரதேசம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
-
ரஷ்ய விமான விபத்து: பயணித்த ஐம்பது பேரும் பலி!
மொஸ்கோ: ரஷியாவில் போயிங் ரக விமானம் ஒன்று, காசன் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது, தீப்பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர். ரஷிய தலைநகர் மொஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம் விமானி, ஊழியர்கள் 6 பேர் மற்றும் பயணிகள் 44 பேருடன் மேற்கு ரஷியாவில் உள்ள டாடர்ஸ்டன் மாகாண தலைநகர் காசன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.
-
டெண்டுல்கர் ஓய்வு: மனமுடைந்த குஜராத் ரசிகர் தூக்கிட்டுத் தற்கொலை
– SHM டெல்லி: டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால் மன வேதனை அடைந்த அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள வார்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர் விஜய் கோவிந்த் (20) தீவிர சச்சின் டெண்டுல்கர் ரசிகர். சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நாளில் இருந்தே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் விஜய்.
-
வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை: 15 அம்சங்கள அடங்கிய கொழும்பு பிரகடனம் வெளியீடு
கொழும்பு: பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் மாநாட்டின் இறுதி நாளான நேற்று அரசாங்கத் தலைவர்கள் வெளியிட்டுள்ள 15 அம்ச பிரகடனமொன்றில் அடுத்த ஈராண்டுகளுக்கு இலங்கை இவ்வமைப்புக்கு தலைமை தாங்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு
முகம்மட் சஜி காத்தான்குடி: கிழக்கிலங்கை ஸாஹிறா வலது குறைந்தோர் கல்லூரிக்கு பல்லாண்டு காலமாக பணியாற்றிய சமூக சேவையாளர்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சமீபத்தில் கௌரவிக்கப்பட்டனர். ஸாஹிறா வலது குறைந்தோர் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எச்.எம்.பசீர் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு இவ் சமூக சேவையாளர்களை கௌரவித்தார்.
-
இன்று ஆரம்பமாகும் துபாய் விமான விற்பனைக் கண்காட்சி: புதிய விமானங்கள் அறிமுகம்
இந்த விற்பனைக் கண்காட்சியே விமான வர்த்தகத்தின் மிகப்பெரிய விற்பனை சந்தை – SHM துபாய்: துபாய் விமான விற்பனைக் கண்காட்சியில் எயார்பஸ் (Airbus)மற்றும் போயிங் (Boeing) ஆகிய விமான நிறுவனங்கள் புதிய விற்பனை ஆர்டர்களைப் பெறும் வகையில் புதிய வகை விமானங்களை அறிமுகப் படுத்துகின்றன. துபாயில் இன்று ஆரம்பமாகும் இந்த விற்பனைக் கண்காட்சியே விமான வர்த்தகத்தின் மிகப்பெரிய விற்பனை சந்தை எனக் கருதப் படுகிறது.
-
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது
– SHM டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய உயரிய விருது பாரத ரத்னா. கடந்த கால் நூற்றாண்டுகாலமாக இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். அவர் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார்.
-
சர்வதேச விசாரணையா? அரசாங்கம் நிராகரிப்பு
கொழும்பு: இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வ தேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.
-
பொதுநலவாய மாநாட்டை குழப்ப நான் முயற்சித்தேனா? தமிழ் பத்திரிகை மீது அஸ்வர் எம். பி. பாய்ச்சல்
கொழும்பு: “பொதுநலவாய ஊடக மாநாட்டைக் குழப்ப முயற்சி- அஸ்வரின் செயலுக்கு கண்டனம்” என்ற தலைப்பின் கீழ் நேற்று தமிழ் பத்திரிகை ஒன்று (தினகரன் அல்ல) வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு முற்றும் முரணானது என்று தெளிவாக்க விரும்புகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
-
தழிழர் தமிழர்தான்-முஸ்லிம் முஸ்லீம்தான்…இலங்கையில்
– AK-50 லண்டன்: 1980ம் வருட ஆரம்பத்தின் பின்னர் இலங்கை உலகில் பிரபல்யம் பெற்றது. அது தமிழ் எனும் ஓர் இனத்துக்கும் சிங்கள எனும் இன்னுமொரு இனத்துக்கும் சண்டை நடைபெற்று வரும் ஓர் நாடு என உலக மக்கள் தெரிந்துகொண்ட காலம்.