காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் காரியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
‘உயிர் காக்க உதவுவோம் நமக்காக நாமாவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எம்.அஸ்பர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் டீ.வசந்தராஜா, காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி அதிகாரி டாக்டர் விவேகானந்த்,காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் சாகலசூரிய,மட்டு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான்,செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளை தொண்டர் இணைப்பாளர் சலீம் மற்றும் செஞ்சழலுவைச் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காலை 08.30மணியிலிருந்து பிற்பகல் 2.00மணிவரை இடம்பெற்ற இந்நிகழ்வை இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி கிளையும் இளைஞர் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment