Category: Your Kattankudy
-
தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு – நாளை வெள்ளிக்கிழமை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு மார்க்கப் பிரச்சாரக் பணிகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு புதிய காத்தான்குடி -02, ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலில் 11-07-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணியிலிருந்து நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் எம்.ரவூப் தெரிவித்தார்.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய குளிர்சாதனப்பெட்டி அன்பளிப்பு
– நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் விபத்துக்கள் மற்றும் காயங்கள் விடுதிக்கு புதிய குளிர்சாதனப்பெட்டி அன்பளிப்பாக கிடைத்துள்ளது. காத்தான்குடி.06 பிரதான வீதியில் வசிக்கும் ஜனாப் MLM. ஸாஜித் என்ற சகோதரரால் இக் குளிர்சாதனப்பெட்டி அன்பளிப்புச் செய்யப்பட்டது.
-
‘எனது மரணத்தில் முஸ்லிம்களுக்கு விடிவு கிடைப்பின் என்னை கொன்றுவிடுங்கள்: இறுதிவரை இஸ்லாத்துக்காக போராடுவேன்’
கொழும்பு: முஸ்லிம் மக்களின் நன்மைக்காகவும் மத உரிமைக்காகவும் எனது இறுதி மூச்சுள்ளவரை போராடுவேன். இதற்காக இந்த சபைக்குள்ளும் வெளியிலும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன் என ஏ.எச்.எம்.அஸ்வர் எம்பி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
-
‘KKY SMS’ இலவச சேவையின் 3ம் ஆண்டு நிறைவு!
– KKY SMS காத்தான்குடி: இன்று இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் அனைவரிடத்திலும் பிரபல்யமாகி நன்மதிப்பைப் பெற்றுவரும் KKY குறுந்தகவல் சேவை (KKY SMS), 10.07.2014 அன்றுடன் 3 வருட நிறைவைப் பெற்றிருக்கின்றது.
-
24 வருடங்களின் பின் ஆர்ஜன்டீனாவின் கனவு நனவானது
– MJ சா பவ்லோ: சற்று முன்னர் இடம்பெற்ற உலகக் கிண்ண இரண்டாவது அலையிறுதிப்போட்டியில் நெதர்லாந்தை 4:2 எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் ஜேர்மனியை சந்திக்கிறது ஆர்ஜன்டீனா.
-
காத்தான்குடியைச் சூழ்ந்த கருமேகங்கள்..
– MJ காத்தான்குடி: இன்றைய பலஸ்தீனப் பூமி போலதான் 1990 காலப்பகுதியில் அன்றைய காத்தான்குடி இருந்தது. 10 ஜூன், 1990, அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமாதான உடன்படிக்கையை இரண்டாவது தடவையாக விலக்கிக் கொள்ளும் முகமாக விடுதலைப் புலிகளால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது.
-
‘சூறாசபை தடை செய்யப்பட வேண்டும்’ – ஞானசார: ‘தாம் ஒருபோதும் பொதுலசேனாவை தடைசெய்யக் கோரவில்லை’ – சுஹைர்
கொழும்பு: பொதுபலசேனா தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக புதிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. முஸ்லிம்களின் சூரா சபையை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. சூரா சபை முஸ்லிம் நாடுகளில் நிர்வாக நடவடிக்கைகளில் அங்கமாக உள்ளன. அந்த சபையை முஸ்லிம் நாடுகள் நாடாளுமன்றத்தை போன்று பார்க்கின்றன. எனினும் இலங்கையில் அது நடைமுறையில் இல்லை.
-
இஸ்ரேலின் இதயமில்லா பன்றிகள்
– பிரகாசக்கவி மனித மலம் தின்பதே இவர்கள் இறுதிக் கனவாய் இருக்கக்கூடும். அதனால் தானோ என்னவோ பறந்து பறந்து பாலஸ்தீனப் பாலகர்களின் மண்டையோடு சேமிக்கின்றார்களோ?
-
இலங்கையரை திருப்பியனுப்ப 72 மணிநேர முன்னறிவித்தல்
சிட்னி: சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் 72 மணித்தியால முன்னறிவித்தலின்றி இலங்கைக்கு திருப்பியனுப்பப் படமாட்டார்களென அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
-
கண்ணீரால் நனைந்த பிரேசில் – படத்தொகுப்பு
– MJ றியோ: நேற்றிரவு இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பிரேசில் ஜேர்மனியிடம் வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்தது. தனது நாட்டின் உலகக் கிண்ணக் கனவு பறிபோய்விட்ட ஆழ்ந்த சோகத்தில், பிரேசில் இரசிகர்கள் கண்ணீர்வடித்த அந்த அரிய தருணத்தின் படங்களின் தொகுப்பு இணைக்கப்பட்டிருக்கிறது.
-
ஜேர்மனிக்கு வரலாற்று வெற்றி: கண்ணீரால் நனைந்தது மைதானம்!
– MJ றியோ: சற்று முன்னர் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் ஜேர்மனி, பிரேசிலை 7:1 எனும் கோல் அடிப்படையில் அபாரவெற்றிபெற்று இறிதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
-
‘பாப்பரசர் மன்னிப்புக் கோர வேண்டும்’-ஞானசார
கொழும்பு: பாப்பரசர் இலங்கை பௌத்தர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். காலனித்துவ காலங்களில் இலங்கையில் கிறிஸ்தவ ஆட்சியாளர்ளினால் பௌத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.