24 வருடங்களின் பின் ஆர்ஜன்டீனாவின் கனவு நனவானது

argen– MJ

சா பவ்லோ: சற்று முன்னர் இடம்பெற்ற உலகக் கிண்ண இரண்டாவது அலையிறுதிப்போட்டியில் நெதர்லாந்தை 4:2 எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் ஜேர்மனியை சந்திக்கிறது ஆர்ஜன்டீனா.

சுமார் 130 நிமிடங்கள் விளையாடிய ஆட்டத்தில் இரு அணியும் கோல்கள் எதுவும் போடாமல் இருந்தன. இறுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் பெனால்டி உதைக்கு போட்டி சென்றது.

பெனால்டியின் போது ஆர்ஜன்டீனாவின் கோல் காப்பாளர் ரொமேரியா சிறப்பாக நெதர்லாந்து வீரர்களின் 2 கோல்களைத் தடுத்து ஆர்ஜன்டீனாவின் 24 வருடக் கனவை நனவாக்கினார்.

argen

இறுதியாக இத்தாலியில் இடம்பெற்ற 1990 உலகக் கிண்ணத்தில் ஆர்ஜன்டீனா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது அவ்விறுதிப் போட்டியிலும் ஜேர்மனியும் ஆர்ஜன்டீனாவுமே மோதியிருந்தன.

argen

24 வருடங்களின் பின்னர் ஆர்ஜன்டீனாவும் ஜேர்மனியும் இறுதிப்போட்டியில் ஒன்றையொன்று சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

1990 argentina
World Cup -1990

Published by

Leave a comment