‘பாப்பரசர் மன்னிப்புக் கோர வேண்டும்’-ஞானசார

bothuகொழும்பு: பாப்பரசர் இலங்கை பௌத்தர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். காலனித்துவ காலங்களில் இலங்கையில் கிறிஸ்தவ ஆட்சியாளர்ளினால் பௌத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இதற்கு முன்னர் பதவி வகித்த சில பாப்பரசர்கள் இவ்வாறு சில நாடுகளிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். இந்த அநீதிகளுக்கு பாப்பரசர் மன்னிப்பு கோர வேண்டும். 

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவர்கள் பௌத்த விஹாரைகளை உடைத்து,  பௌத்த பிக்குகளை கொலை செய்திருந்தனர். பாப்பரசர் பொது மன்னிப்பு கோருவதனை விரும்புகின்றோம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment