Category: Your Kattankudy
-
துபாயில் 48 மில்லியன் சதுர அடியில் அமைக்கப்படவிருக்கும் ‘மோல் ஓஃப் த வேர்ல்ட்’
– S-90 துபாய்: துபாயில் சுற்றுலாப் பயணிகளுக்காக மிதமான வெப்பநிலையுடன் கூடிய புதிய செயற்கை நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அங்கு உலகிலேயே மிகப் பெரிய மோல் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.துபாயில் அமைக்கப்பட இருக்கும் இப்புதிய நகரில் ஹோட்டல்கள், பார்க், திரையரங்குகள் ஆகியவையும் இடம்பெற உள்ளன.
-
சமிக்கையில் ஏற்பட்ட குழப்பம்: மோதவிருந்த இருவிமானங்கள் மயிரிலையில் தப்பின (வீடியோ)
– SHM பார்சிலோனா: ஸ்பெயின் பார்ஸிலோனா விமான நிலையத்தில் மோதிக்கொள்ள இருந்த இரண்டு விமானங்கள் நொடிப்பொழுதில் தப்பித்துள்ளன. பார்சிலோனா விமான நிலையத்தில் இருந்து அர்ஜென்டினா ஏர்பஸ் A340 என்ற விமானம் புறப்படுவதற்கு தயாராக மெதுவாக மேலேறி சென்று கொண்டிருந்தது.
-
உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி: நான்கு அணிகளின் கடந்தகால அரையிறுதிச் சுற்று வரலாறுகள்
– MJ றியோ: உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப்போட்டிகளை நிறைவுக்குக் கொண்டுவரும் அரையிறுப்போட்டிகளின் முதலாவது போட்டி, இன்று இரவு இடம்பெற இருக்கின்றன. இவ் அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி இருக்கும் 4 அணிகளது கடந்தகால உலகக் கிண்ண அரையிறுதி வரலாறுகள் பின்வரும் படங்களில் விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
-
‘பிளக் டிக்கட்’ சரச்சையில் நெய்மரின் தந்தை…
– SHM பிரேசிலியா: உலக கோப்பை கால்பந்தாட்ட ‘பிளக் டிக்கெட்’ சந்தையில் பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மரின் தந்தைக்கு தொடர்புள்ளதாக அந்த நாட்டு பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது. கால்பந்து போட்டித்தொடரில் இருந்து காயம் காரணமாக நெய்மர் விலகியுள்ள நிலையில், பிரேசில் ரசிகர்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.
-
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோர வந்த 41 பேர் படகில் வைத்தே மட்டக்களப்புக் கடலுக்கு அப்பால் இலங்கையிடம் ஒப்படைப்பு!
மெல்போர்ன்: இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குத் தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 41 பேர்களை நடுக்கடலில் மறித்து, பின்னர் அவர்களை இலங்கை அதிகாரிகளிடம் நடுக்கடலிலேயே ஒப்படைத்துவிட்டதாக அவுஸ்திரேலியா ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த ஒப்படைப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக அது கூறியது.
-
லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யாவின் இப்தார் நிகழ்வு
– எம்.எச்.எம்.அன்வர் காத்தன்குடி: புதிய காத்தன்குடி ஏ.எச்.எம். பௌசி மாவத்தையில் இயங்கிவரும் ‘லஜ்னத்துஸ்ஸூன்னா அந்நபவிய்யா’ பெண்கள் அரபிக்கல்லூரியின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று அதன் வளாகத்தில் இடம்பெற்றது. பயான் நிகழ்வு அஷ்ஷெய்ஹ் எம்.ஏ.சி.எம். ஜெய்னுலாப்தீன் (மதனி) யினால் நிகழ்த்தப்பட்டதுடன் அரபிக்கல்லூரி தொடர்பாகவும் விளக்கமளித்தார்.இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
-
குவைத்தில் ரமழானில் இடம்பெற்றுவரும் ‘குர்ஆனை புரிந்து கொள்ளுங்கள்’- குர்ஆன் வகுப்பு
– K-TIC குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC) ஏற்பாடு செய்திருக்கும் புனித ரமழான் மாத சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சங்கத்தின் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இஃப்தாருக்கு பிறகு இஷா வரை இடம்பெற்று வருகிறது.
-
காத்தான்குடியில் மாபெரும் இலவச E.N.T. வைத்திய முகாம்
– SLyouths காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழக்கிழமை (10.07.2014) அன்று காலை 8.00 மணி முதல் பி.ப. 03.00 மணி வரை காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலில் இலவச E.N.T. (கண், மூக்கு, தொண்டை சிகிச்சை) வைத்திய முகாம் கனடா நாட்டு விஷேட வைத்திய நிபுணர்களினால் நடைபெறவுள்ளது.
-
‘அமைச்சரினதும் ஆளுநரினதும் சிந்தனைக்கமைவாக சாகசப் பூங்கா அமையப் பெற்றுள்ளது’ – யாழ்.மாநகர முதல்வர்
– FM. பர்ஹான் யாழ்: சிறுவர்களது பொழுதுபோக்கு மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பழைய பூங்காவின் சாகசப் பூங்காவை அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் பாதுகாத்து பராமரிக்க வேண்டுமென யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.
-
யார் இந்த இஸிஸ்? யார் இந்த அபூபக்ர் பக்தாதி??
– MJ லண்டன்: தற்பொழுது உலகெங்கிலிலும் பேசப்பட்டுவரும் பெயர்கள் இரண்டு. ஒன்று இஸிஸ் என்ற போராட்ட அமைப்பு. மற்றையது அதன் தலைவர் அல்லது ஹலீபா என அழைக்கப்படும் அபுபக்ர் அல் பக்தாதி ஆகும்.
-
‘ஈராக்கிலுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்தில்லை’
கொழும்பு: ஈராக்கிலுள்ள சுமார் 1000 இலங்கையருக்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லையெனவும் பக்தாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இன்னமும் செயற்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
-
139 மில்லியன் ரூபா வருமானவரி நிலுவையில்!!
கொழும்பு: நாற்பதாயிரத்துக்கும் அதிகமான தனியார் நிறுவனங்களும் தனி நபர்களும் சுமார் 139 பில்லியன் ரூபா வருமான வரி செலுத்தவில்லையென உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வருமான வரிகளைச் செலுத்தத் தவறுபவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் பி.எல்.எஸ்.லியனகே தெரிவித்துள்ளார்.