இலங்கையரை திருப்பியனுப்ப 72 மணிநேர முன்னறிவித்தல்

boat-with-500-libya-refugees-runs-aground-in-italy-2011-05-08_l[1]சிட்னி: சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் 72 மணித்தியால முன்னறிவித்தலின்றி இலங்கைக்கு திருப்பியனுப்பப் படமாட்டார்களென அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் பயணம் செய்கையில் தடுத்து நிறுத்தப்பட்ட 153 பேர்கொண்ட குழுவினர் தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உறுதிமொழி முன்வைக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் 41 புகலிடக் கோரிக்கையாளர்களை கடந்த திங்கட்கிழமை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்ததை உறுதி செய்தமையை தொடர்ந்தே உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் மேற்படி வழக்கினை தாக்கல் செய்திருந்ததுடன், புகலிடம் கோரி வருபவர்களை கடலில் வைத்தே திருப்பியனுப்புவது அவர்களது உரிமைகளை மீறும் செயலாகுமெனவும் அவர்கள் தமது தரப்பு நியாயத்தை முன்வைத்திருந்தனர்.

கடலில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு படகுகளும் கடந்த வாரம் முதல் கடலில் நின்றிருந்த நிலையிலேயே கடந்த திங்கட்கிழமை ஒரு படகிலிருந்த மக்கள் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதனை அந்நாட்டு அரசாங்கம் உறுதிபடுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்தே சட்டத்தரணிகள் மற்றைய படகிற்கான இடைக்கால தடையுத்தரவினை நிதிமன்றத்திற்கூடாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

எனினும் நேற்று வரை இந்த இரண்டாவது படகு குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் எவ்வித தகவல்களையும் தர மறுத்துள்ளது. இதேவேளை இந்த படகிலிருந்தவர்கள் தற்போது அவுஸ்திரேலிய கப்பலொன்றிலிருப்பதாகவும் இவர்கள் தமிழர்களெனவும் அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் இந்த வழக்கினை தாக்கல் செய்த சட்டத்தரணிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் புகலிடத்திற்கான கோரிக்கைகளை இன்னமும் முறைப்படி முன்வைக்கவில்லையெனவும் வாதிட்டனர்.

எனினும் சொலிசிட்டர் – ஜெனரல் ஜஸ்டின் படகு அவுஸ்திரேலியா வின் குடிவரவு எல்லைக்கு அப்பால் வைத்தே இனங்காணப்பட்டத னால் அவர்களுக்கு புகலிடம் கோருவதற்கான உரிமை இல்லையெனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment