காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய குளிர்சாதனப்பெட்டி அன்பளிப்பு

hospital 1– நமது நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் விபத்துக்கள் மற்றும் காயங்கள் விடுதிக்கு புதிய குளிர்சாதனப்பெட்டி அன்பளிப்பாக கிடைத்துள்ளது. காத்தான்குடி.06 பிரதான வீதியில் வசிக்கும் ஜனாப் MLM. ஸாஜித் என்ற சகோதரரால் இக் குளிர்சாதனப்பெட்டி அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இந்த அன்பளிப்பு வைபவம் நேற்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சகோதரர் MLM. ஸாஜித் அவர்களின் தகப்பனாரினால் வைத்திய அத்தியட்சகர் Dr. T. கௌரிசங்கரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இக் குளிர்சாதனப்பெட்டி அன்பளிப்பு எமது வைத்தியசாலைக்கு அவசியம் தேவைப்பட்டது என்பதுடன் பொருத்தமான நேரத்தில் கிடைத்தது என்றும் வைத்திய அத்தியட்சகர் Dr. T. கௌரிசங்கரன் தெரிவித்தார்.

அல்லாஹ் இந்த றமழான் மாதத்தில் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு ஈருலக நற்பாக்கியங்களையும் தந்தருள்வானாக.

hospital kattankudy

hospital 1

Published by

Leave a comment