‘KKY SMS’  இலவச சேவையின் 3ம் ஆண்டு நிறைவு!

KKYsms– KKY SMS

காத்தான்குடி: இன்று இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் அனைவரிடத்திலும் பிரபல்யமாகி நன்மதிப்பைப் பெற்றுவரும் KKY குறுந்தகவல் சேவை (KKY SMS), 10.07.2014 அன்றுடன்  3 வருட நிறைவைப் பெற்றிருக்கின்றது.

சமூக நல நோக்கில் 3 வருடமாக இலங்கை உட்பட, உலக‌ நடப்பு செய்திகள், மார்க்க விடயங்கள், பரிசில்களை அள்ளித்தரும் வினா-விடைப் போட்டிகள், விளையாட்டுச் செய்திகள் மற்றும் தினந்தோறும் ஐவேளை தொழுகை நேரங்கள் போன்ற பல சேவைகளை உடனுக்குடன் வழங்கி, காத்தான்குடி வாழ் மக்களுக்கும் வெளியூர் மக்களுக்கும் இச் சேவைகளை வழங்கி வருகின்றது.

KKYsms

அது மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருக்கும் காத்தான்குடி உட்பட தமிழ் பேசும் மக்களும் KKY SMS சேவையினை பயன்படுத்தி வருகின்றனர்.

இச் சேவையானது எவ்வித பக்க சார்பும் இன்றி நடுநிலைமையாக பல தடைகளையும் தாண்டி சமூக நல நோக்கில் செயற்படுகின்றது.

எம்மோடு தொடர்ந்து இணைந்திருக்கும் அன்புள்ளங்களுக்கு எமது நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.

– நிர்வாகம்

Published by

Leave a comment