ஜேர்மனிக்கு வரலாற்று வெற்றி: கண்ணீரால் நனைந்தது மைதானம்!

germany– MJ

றியோ: சற்று முன்னர் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் ஜேர்மனி, பிரேசிலை  7:1 எனும் கோல் அடிப்படையில் அபாரவெற்றிபெற்று இறிதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

போட்டி ஆரம்பித்த முதல் 30 நிமிடங்களுக்குள் ஜேர்மனி 5 கோல்களையும் போட்டு, இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

போட்டி சென்ற போக்கிற்கு ஜேர்மனி வீரர்கள் ஒவ்வொருத்தரும் ஒரு கோளைப் போடுவார்கள் என்றே கள நிலைமை இருந்தது.
பிரேசில் அணியின் நட்சத்திரம் நெய்மார் மற்றம் அணித் தலைவர் சில்வா ஆகியோர் இல்லாத வெற்றிடம் பிரேசில் அணியில் நன்கு உணரப்பட்டது.

germany

உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பித்ததிலிருந்தே ஜேர்மனி மிகச் சிறப்பாக விளையாடிவரும் ஓர்அணி. பல விளையாட்டு வல்லுனர்கள் ஜேர்மனியை எதிர்வு கூறியிருந்தனர்.
1920ம் ஆண்டில் உருகுவேயிடம் பிரேசில் 6:0 என்ற கோல் அடிப்படையில் தோல்வியடைந்திருந்தது. அதன் பின்னர்

article_img[1]

இப்போட்டியில் பிரேசில் 7:1 என்ற ரீதியில் படுதோல்வியடைந்திருக்கின்றது. போட்டியின் 90வது நிமிடத்தில் பிரேசில் அணியின் ஒஸ்கார் ஒரு கோலைப் போட்டு நில் என்ற இலக்கை உடைத்தார். 

பிரேசிலின் தோல்வியையடுத்து, மைதானத்திலிருந்து திரண்டிருந்த இரசிகர்கள் கண்ணீர் சிந்தினர். பலர் மைதானத்தலிருந்து நேரகாலத்தோடு வெளியேறினர்.

klose

ஜேர்மனி வீரர் குளோல் உலகக் கிண்ண சாதனையை நிலைநாட்டி இருக்கிறார். உலகக் கிண்ணப் போட்டியில் அதிக கோல் போட்டவர் பட்டியலில 16 கோல்களைப் போட்டு குளோஸ் முதல் இடத்தில் இருக்கிறார். இதற்கு முன்னர் பிரேசில் அணியின் ரொனால்டோ 15 கோல்களைப் போட்டு சாதனைபடைத்திருந்தார். இச்சாதனை இப்போட்டியில் உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனி சார்பாக கோல்போட்டோர் விபரம்:

  • T. Müller 11′
  • M. Klose 23′
  • T. Kroos 24′, 26′
  • S. Khedira 29′
  • A. Schürrle 69′, 79′

_76134001_023077925[1]

Published by

Leave a comment