-
றமழான் கால பயிற்சி வகுப்புக்களில் இருந்து நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பணப் பரிசும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: காத்தான்குடி-பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் புனித றமழான் மாதத்தில் இடம்பெற்ற றமழான் கால பயிற்சி வகுப்புக்களில் இருந்து நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பணப் பரிசும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வும் கடந்த 25-07-2014 வெள்ளிக்கிழமை மாலை பாலமுனை அம்மார் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
தாருல் ஹதீஸ் அமைப்பின் அனுசரணையுடன் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கும், சவுண்டர்ஸ் விளையாட்டு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த புனித இப்தார் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி- தாருல் ஹதீஸ் அமைப்பின் அனுசரணையுடன் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கும் ,சவுண்டர்ஸ் விளையாட்டு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கடந்த 25-07-2014 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
29ம் இரவு புனித ஆலயத்தில் பெய்த மழை!
மக்கா: புனித ரமழானின் 29ம் இரவான நேற்றைய இரவு அல்லாஹ்வின் புனித ஆலயமான ஹரம் ஷரீபில் மழைபெய்ய ஆரம்பித்தது. ஆனால் இதனை அதிசயம் என்ற பார்வையில் நோக்கவேண்டிய தேவை இல்லை. நபி(ஸல்) அவர்களது காலம் முதல் இன்றுவரை ஹரத்தில் தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.
-
மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் யு.எல்.எம்.நஜீப் அவர்களை ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அழிவு சத்தியத்துக்கான பகிரங்க அழைப்பு
ஓட்டமாவடி: கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் யு.எல்.எம்.நஜீப் அவர்களை மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் பெரு நாள் தினத்தன்று ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயலுக்கு பகிரங்க அழிவுச் சத்தியம் செய்வதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.
-
பெருநாள் தொழுகை
1) நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி) 2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
-
24 மணிநேர யுத்தநிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்!
– MJ டெல் அவிவ்: ஐ.நாவின் வேண்டுகோளிற்கிணங்க 24 மணிநேர யுத்த நிறுத்த கோரிக்கைக்கு இஸ்ரேல் சம்மதித்திருக்கின்றது. ஏற்கனவே 12 மணித்தியாலங்களாக இருந்த உடன்படிக்கை 16 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் 4 மணிநேர அதிகரிப்பை ஹஸாஸ் மறுத்திருந்தது.
-
அமெரிக்காவின் முதலாவது தற்கொலை குண்டுதாரி சிரியாவில்…
– MJ பெய்ரூட்: சிரியாவில் இடம்பெற்றுவரும் உந்நாட்டுப் போரில், சிரியா அரசாங்கத்துக்கு எதிராகப் போராடிவரும் அல்கைதா குழுவில் இணைந்து போராடிவந்த அமெரிக்க குடியுரிமையைப்பெற்ற தற்கொலைக் குண்டுதாரியின் காணொலியை சிரியாவின ‘நுஸ்ரா முன்னணி’ எனும் மீடியா வெளியிட்டிருக்கின்றது.
-
காஸா யுத்த நிறுத்தம்: மேலும் 4 மணித்தியாலங்கள் நீடிப்பு
காஸா: காஸாவில் அறிவிக்கப்பட்டிருந்த 12 மணி நேர மோதல் இடைநிறுத்தத்தை இஸ்ரேலிய அரசாங்கம் மேலும் நான்கு மணி நேரத்துக்கு நீட்டித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை எட்டு மணிக்கு ஆரம்பித்திருந்த இந்த மோதல் இடைநிறுத்தம் இரவு பத்து மணி வரை கடைப்பிடிக்கப்படும் என்று தெரிகிறது.
-
கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் இப்தார் நிகழ்வு
கல்குடா: கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அனுசரணையில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வு 2014.07.26ம் திகதி சனிக்கிழமை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ஜனாப். A.M. அன்வர் தலைமையில் இடம்பெற்றது.
-
ஆயிரத்தைதத் தாண்டியது காஸாவின் ஷஹீதுகள்! காயப்பட்டோர் 5870 பேர்!!
– MJ காஸா: கடந்த 19 தினங்களாக காஸா மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் ஷஹீதான காஸா மக்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியிருக்கின்ற செய்தியினை அறியும் எவரும் கண்களங்காமல் இருக்கப்போவதில்லை!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஷஹீதான கர்ப்பிணித் தாயின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு மீட்பு!
– AF-90 காஸா: காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் ஷஹீதான கர்ப்பிணித் தாயின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது.காஸா பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
-
இஸ்ரேல்-காஸா: 12 மணி நேர யுத்த நிறுத்தம்
ஜெரூஸலம்: இஸ்ரேலிய அரசாங்கத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதை அடுத்து காசாவில் ஒரு 12 மணி நேரத்துக்கான மோதல் இடைநிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.