-
‘காஸாவிற்காக பழிவாங்குவோம், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’
– AF-90 மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தியினைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடிக்கி விடப்பட்டுள்ளன.மும்பை பொலீசாருக்கு வந்த ஒரு கடிதத்தில் ‘காஸா போராட்டத்திற்கு பழிவாங்குவோம்’ என்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
ஏறாவூரில் நபி வழியில் பெருநாள் தொழுகை
அஸ்ஸலாமு அலைக்கும் ஏறாவூர்: இன்ஷா அல்லாஹ் நாளை 29-07-2014 செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள், நபி(ஸல்) அவர்களின் வழியில் திடல் தொழுகையை நிறைவேற்ற ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.
-
கமரூன் நாட்டு துணைப் பிரதமர் மனைவியை போகோஹராம் கடத்திச் சென்றுள்ளனர்
– SHM கமரூன்: நைஜீரியாவின் ஒரு பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி போகோஹராம் அமைப்பு போராடி வருகிறது. சமீபத்தில் பள்ளி மாணவிகள் 200க்கும் அதிகமானவர்களைக் கடத்திய இவ்வமைப்பு சிறையில் உள்ள தங்களது இயக்கத்தவர்களை விடுதலை செய்யக் கோரி நிர்பந்தித்து வருகின்றனர்.
-
சர்வதேச பிறை அடிப்படையில்- ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை-காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன 28-07-2014 இன்று திங்கட்கிழமை கொழும்பு,புத்தளம்,அக்கறைப்பற்று ,காத்தான்குடி, நீர் கொழும்பு ,ஹபுகஸ்தலாவ உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்றது.
-
ஐக்கிய ராச்சியத்தில் திங்கட்கிழமை நோன்புப் பெருநாளாக அறிவிப்பு
லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் (UK) 28-07-2014 திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் என அங்குள்ள பள்ளிவாயல்கள் தற்பொழுது அறிவித்துவருகின்றன. கிழக்கு லண்டன் பள்ளிவாயல் மற்றும் ரெடிங் நகர் பள்ளிவாயல்கள் தற்பொழுது பெருநாள் அறிவிப்பைச் செய்திருக்கின்றன.
-
சவுதி அரேபியாவில் ஷவ்வால் பிறை தென்பட்டதால் நாளை நோன்புப் பெருநாளாக அறிவிப்பு
– MJ றியாத்: சவுதி அரேபியாவில் பல பாகங்களிலும் இன்று 27-07-2014 மாலை ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதால், 28-07-2014 நாளை திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுவதாக அரேப் தொலைக்காட்சி சற்று முன்னர் உறுதிப்படுத்தியது.
-
இதுவரையில் ஷவ்வால் பிறை தென்பட்டதாகத் தெரியவில்லை
கொழும்பு: இலங்கையின் எப்பாகத்திலும் இதுவரைக்கும் ஷவ்வால் மாதத்ததுக்கான தலைப்பிறை தென்பட்டதாகத் தெரியவில்லை. எனினும் கொழும்பு பெரியபள்ளிவாயலில் பிறைக்குறிய மாநாடு தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும், பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டால் உடனடியாக இலங்கை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறை மாநாட்டில் கலந்துகொண்டோர் தெரிவிக்கின்றனர்.
-
இன்றைய ஹமாஸ் தாக்குதலில் இந்தியாவில் பிறந்த இஸ்ரேல் இராணுவ வீரர் பலி!
– AF-90 ஜெருஸலம்: ஹமாஸ் அமைப்பினர் நடத்திய அதிரடி ரொக்கெட் தாக்குதலில் இன்று இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவர் இந்தியாவில் பிறந்த இஸ்ரேலியர் ஆவார். இவரையும் சேர்த்து இதுவரை ஹமாஸ் தாக்குதலில் 43 இஸ்ரேல் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
கோத்தபாயவிற்கு எதிராக சாட்சியம் அளிக்கவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி
கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் முன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார்.
-
யுத்த நிறுத்தத்திற்கு ஹமாஸ் மறுப்பு: காசாவில் மீண்டும் கடுமையான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ள இஸ்ரேல்!
ஜெரூஸலம்: காஸாவில் இஸ்ரேல் தனது இராணுவ தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது. காசாவின் பல பகுதிகளிலும் பாரிய பீரங்கி குண்டுச் சத்தங்களை கேட்கக்கூடியதாக உள்ளது.இஸ்ரேலிய ஷெல் தாக்குதல் மீண்டும் ஆரம்பித்த நிலையில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று காஸா அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை- காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில்
-பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின ஏற்பாட்டில் நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையும்,பெருநாள் குத்பா பிரசங்கமும் வழமை போன்று இன்ஷா அல்லாஹ் காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் காலை 6.30 மணிக்கு நடாத்தப்படவுள்ளதாக காத்தான்குடி-தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.
-
பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை- பாலமுனை நடுத்துறை கடற்கரையில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: காத்தான்குடி-பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையும்,பெருநாள் குத்பா பிரசங்கமும் வழமை போன்று இன்ஷா அல்லாஹ் பாலமுனை நடுத்துறை கடற்கரையில் காலை 6.20 மணிக்கு நடாத்தப்படவுள்ளதாக பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் தலைவர் ஏ.எச்.எம்.அமானுல்லாஹ் தெரிவித்தார்.