றமழான் கால பயிற்சி வகுப்புக்களில் இருந்து நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பணப் பரிசும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வு

palamunai– பழுலுல்லாஹ் பர்ஹான்

பாலமுனை: காத்தான்குடி-பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் புனித றமழான் மாதத்தில் இடம்பெற்ற றமழான் கால பயிற்சி வகுப்புக்களில் இருந்து நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பணப் பரிசும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வும் கடந்த 25-07-2014 வெள்ளிக்கிழமை மாலை பாலமுனை அம்மார் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் தலைவர் ஏ.எச்.எம்.அமானுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.இப்றாஹீம் கலந்து கொண்டு றமழான் கால பயிற்சி வகுப்புக்களில் இருந்து நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பணப் பரிசையும், சான்றிதழையும் வழங்கி வைத்தார்.

palamunai

இங்கு சிறப்புரையை பாலமுனை அம்மார் ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி அஸ்ஹர் மின்ஹாஜி நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் பிரதிநிதிகள்,உலமாக்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

palamunai

palamunai

Published by

Leave a comment