இஸ்ரேல் தாக்குதலில் ஷஹீதான கர்ப்பிணித் தாயின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு மீட்பு!

gaza– AF-90

காஸா: காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் ஷஹீதான கர்ப்பிணித் தாயின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது.காஸா பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

இதில் அப்பாவி பொதுமக்கள் 900க்கும் மேற்பட்டோர் ஷஹீதாகியுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சுக் குழந்தைகள். உக்கிரமாக நடக்கும் இந்தப் போரில் நேற்று மத்திய காஸாவின் டெயிட் அல் பலாஹ் நகரம் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.

இத்தாக்குதலில் கட்டிட இடிபாடிகளில் சிக்கி 23 வயதான நிறைமாதமான கர்ப்பிணி பெண் ஒருவர் ஷஹீதானார்.. ஆனால், குழந்தை உயிருடன் இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக அந்த சிசுவை வெளியில் எடுத்தனர்.

அந்த சிசு உயிர் வாழ்வதற்கு 50% சாத்தியக் கூறுகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by

Leave a comment