கல்குடா: கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அனுசரணையில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வு 2014.07.26ம் திகதி சனிக்கிழமை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ஜனாப். A.M. அன்வர் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விப்தார் நிகழ்வில், கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான அஷ்ஷெய்க். M.T.M. றிஸ்வி (மஜீதி) (M.A.) அவர்களினால் காஸாவின் இன்றைய நிலை எனும் தலைப்பில் சிறப்பரையாற்றப்பட்டது.
இவ்இப்தார் நிகழ்வுக்கு மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். S.A. றியாஸ், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தார்கள், பிரதேச இளைஞர்கள் மற்றும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஆலோசகர்கள் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தகவல்
KCDA ஊடகப்பிரிவு
Published by




Leave a comment