அமெரிக்காவின் முதலாவது தற்கொலை குண்டுதாரி சிரியாவில்…

al qaida– MJ

பெய்ரூட்: சிரியாவில் இடம்பெற்றுவரும் உந்நாட்டுப் போரில், சிரியா அரசாங்கத்துக்கு எதிராகப் போராடிவரும் அல்கைதா குழுவில் இணைந்து போராடிவந்த அமெரிக்க குடியுரிமையைப்பெற்ற தற்கொலைக் குண்டுதாரியின் காணொலியை சிரியாவின ‘நுஸ்ரா முன்னணி’ எனும் மீடியா வெளியிட்டிருக்கின்றது.

அமெரிக்க குடியுரிமைபெற்ற மொனிர் முகமட் அபூ ஸல்ஹா எனும் 22 வயதான இளைஞர், தான் உட்பட இன்னும் 2 சக போராளிகளுடன் இணைந்து கடந்த மே மாதம் 25ம் திகதி, சிரியாவின் இத்லிப் எனும் இடத்தில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை ஊடருத்து தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.

இத்தாக்குதலில் அல்கைதாவின் 3 தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒருவரே இந்த மொனிர் முகமட் அபூ ஸல்ஹா என குறித்த மீடியா உறுதிப்படுத்தியிருப்பதுன், தாக்குதலை நடாத்திய மற்றைய இருவருள் ஒருவர் மாலைதீவைச் சேர்ந்தவர் எனவும் நுஸ்ரா மேலும் தெரிவிக்கிறது.

அபூ ஸல்ஹா எனும் அமெரிக்க தற்கொலைக் குண்டுதாரி, தான் தாக்குதலுக்குச் செல்வதற்கு முன்னர் சிரித்த முகத்துடன் கொச்சை அரபியில் பேசிய ஒளிவடிவத்தையே நுஸ்ரா ஒளிபரப்பியது. இந்த கானொளியில் அபூ ஸல்ஹா கூறியதாவது,

al qaida
தற்கொலைத் தாக்குதலை நடாத்துவதற்கு முன்னர் அபூ ஸல்ஹா உரையாற்றிய போது

‘ இவ்வுலகத்தில் வாழ்வதற்கு எதுவும் இல்லை. யாராக இருந்தாலும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும். அதன் பின்னர் ஒன்றில் சுவர்க்கம் அல்லது நரகமே உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்போகும் சொத்து.நான் சுவர்க்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனது பயணம் சுவர்க்கமே’

என அபூ ஸல்ஹா அந்த காணொலியில் குறிப்பிட்டிருந்தார்.

16 தொன் வெடிபொருட்களை ஒரு ட்ரக் வண்டியில் ஏற்றிச் சென்று, மிகப்பெரிய இராணுவ உணவகத்தைக் குறிவைத்து நடாத்திய தற்கொலைத் தாக்குதலில் அபூ ஸல்ஹா கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் பிறந்த அபூ ஸல்ஹா, தனது கல்லூரி கற்கைக்காக அமெரிக்காவின் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து பின்னர் சிரியாவுக்குள் வந்தார்.

தற்பொழுது சிரியாவின் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதற்காகவே உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிரியாவுக்குள் நுழைந்து அல்கைதாவுடன் இணைந்து போரிட்டு வருகின்றனர்.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல வெளிநாட்டு இளைஞர்கள் அல்கைதாவுடன இணைந்து போரிட்டும், கொல்லப்பட்டும் இருந்தாலும், அமெரிக்காவின் முதலாவது தற்கொலைக் குண்டுதாரியாக அபூ ஸல்ஹா திகழ்கிறார்.

Published by

Leave a comment