மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் யு.எல்.எம்.நஜீப் அவர்களை ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அழிவு சத்தியத்துக்கான பகிரங்க அழைப்பு

faris photoஓட்டமாவடி: கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் யு.எல்.எம்.நஜீப் அவர்களை மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் பெரு நாள் தினத்தன்று ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயலுக்கு பகிரங்க அழிவுச் சத்தியம் செய்வதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.

குறிந்த கிராம சேவகர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்கள் மீது கஞ்சா விற்பனை செய்வதாகவும் விற்பனையாளர்களுடன் சிநேகபூர்வமான உறவை கொண்டுள்ளதாகவும்,சட்ட விரோத குழுக்களின் பின்னனியில் இயங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது முற்றிலும் பிழையானது எனவும் குறிந்த கிராம சேவகர் தன் மீது உள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாக இவ்வாறு செய்துள்ளதாகவும் தனது உரிமை மீறப்பட்டமைக்காகவும்,தன் மீது வீனான பழி சுமர்த்தியமைக்காக வேன்டி இலங்கை மனித உரிமைகள் ஆனைகுழுவில் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.

இதன் ஆரம்ப கட்ட விசாரனை கடந்த 24.07.2014 வியாழக்கிழமையன்று மனித உரிமை ஆனைக்குழு மட்டக்களப்பு பிராத்திய பணி மனையில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் குறிந்த கிராம சேவகர் இளைஞர்களை பிழையான அரசியல் கலாசாரத்துக்குள் கொண்டு செல்வதாகவும்,அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்வதாக ஆதார பூர்வமான தகவல்களுடன் வாழைச்சேனை பொலிஸ் முறைப்பாடுகள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக செய்யப்பட்டுள்ளதாகவும்,குறிப்பிட்டார்.

ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் தமது உன்மை நிலையினை மக்களுக்கு சொல்வதற்காக இறை தீர்ப்பை நாடுவதற்காக பகிரங்க அழிவு சத்தியம் செய்வதற்கான அழைப்பினை ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் கிராம சேவகர் யு.எல்.எம்.நஜீப் அவர்களுக்கு விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் பற்றிய விஷேட கண்னோட்டம்

முகம்மட் பாரிஸ்
பிறப்பு- 1991.06.20 பதுரியா நகர் கிராம்
கிராம சேவையாளர் பிரிவு – 207ஏ மாஞ்சோலை
முகவரி – இளைஞர் கழக வீதி,பதுரியா நகர்,மாஞ்சோலை.
தொழில்- ஊடகவியலாளர்
சமூக மட்ட அமைப்புக்களின் வகிபாகம்

01. செயலாளர் – பதுரியா- மாஞ்சோலை இக்பால் இளைஞர் கழகம்

02. அமைப்பாளர்- கோறளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம

03. உப தலைவர்- மட்டு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனம்

04. செயலாளர்- மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம்

05. செயலாளர் – கோறளைப்பற்று மேற்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்

06. செயலாளர் – நதா சமூக மேம்பாட்டு ஒன்றியம்

07. பணிப்பாளர் – கல்குடா மீடியா போரம்

08. செயலாளர்- டெங்கு ஒழிப்பு விழிப்புக்குழு

09. உப செயலாளர் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம்- மட்டக்களப்பு

10. உப. செயலாளர் – பழைய மாணவர் ஒன்றியம் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்.

11. உறுப்பினர் – கிராம அபிவிருத்தி சங்கம் பதுரியா நகர்

12. பொருளார்- கிராம அபிவிருத்தி அமைப்பு மாஞ்சோலை மேற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

13.உறுப்பினர்- சிவில் பாதுகாப்பு குழு

ஏனைய சிவில் சமூக மட்ட அமைப்புக்கள்

மக்கள் தொடர்பும்,சாதனையும்
யு.எஸ்.எயிட் நிருவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ

நிகழ்ச்சி திட்டம்

திட்ட அமுலாக்கம்- நதா சமூக மேம்பாட்டு ஒன்றியம்.

யு.எஸ்.எயிட் நிருவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சி திட்டம் திட்ட இணைப்பாளர் 16.04.2012- 15.07.2012

இதன்னூடாக ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு வாழைச்சேனை கோறளைப்பற்று ஆகிய பிரதேச சபைகளை ஒன்றினைத்த இன நல்லூறவு வேலைத்திட்டம் -2012
இத்திட்டத்தின்னூடாக யுத்ததினால் விரிசல் பட்டு இருத்த தமிழ் முஸ்லிம் உறவு களை பலப்படுத்தல் அதற்கான ஒருங்கினைப்பாளராக செயற்பட்டு பிரதேசத்தின் சுகாதார மேம்பாட்டுக்கான திண்மக்கழிவு முகாமைத்தும் பற்றிய திட்டம் தயாரித்து வழங்கல்.

faris photo
எம்.ரீ.எம்.பாரிஸ்

அம்கோர் நிருவனம்- நிலையான வாழ்வாதார வேலைத்திட்டம்
இத்திட்டத்தின் சமூக வலுவுட்டாளராக பணி புரிதல் பதுரியா- மாஞ்சோலை கிராமத்தில் நடைமுறைப்படுத்தல் இதன்னூடாக சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் 11 குழக்கள் உருவாக்கப்பட்டு சுயதொழில் ஊக்குவிப்பு நிதியினை பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் பெற்று கொடுத்தல் கிராமத்தின் முன்னோற்றத்தில் பங்களிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு முன்நின்று உழைத்தல்.

கல்குடா மீடியா போரம்

தாய் நாட்டுக்கு விசுவாசமுள்ள சவால்களை எதிர்கொள்ளக்கூடிய இளைஞர் அணியினை உருவாக்கல் மற்றும் தேச உணர்வுள்ள சிறந்த கலைஞர்களையும்,இளைஞர்களை உருவாக்கி கலாசார சீர்கேடுகளில் இருந்து இளைஞர் யுவதிகளை மீட்பதோடு பொது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தல். போன்ற செயற்பாடுகளை இலக்காக கொண்டு இயங்கல்

இலங்கை மக்கள் அரங்க செயற்றிட்டம் – 2014

கள இணைப்பாளராக செயற்படல்

கிழக்கு மாகாணத்தில் இத்திட்டம் நடை முறைப்படுத்தல்
தேசிய இரு மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு உடன் இனைத்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் ஒன்றியம் திட்ட அமுலாக்கம்.
இதனூடாக சமய இன மற்றும் சமூகப்பிரச்சினைகளை கையாள்தல்,சமய மற்றும் இனம் சார் பன்மைத்துவம்,சமய வித்தியாசங்களை மதித்தல்,பிரச்சினைகளுக்கான அகிம்சைவழித்தீர்வு,இனரீதியான வித்தியாசங்களுக்கு ஏற்புடமையளித்தல் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தல் இதற்காக முன் நின்று உழைத்தல்.

பொது நிருவனங்களுடனான தொடர்பு

பள்ளிவாயல்,கோவில்கள்,விகாரை போன்ற மத ஆலையங்களுடன் நற் தொடர்பும் மத குரு மார்களுடனான உறவு
பாடசாலை அதிபர் ஆசிரியர்களுடனான நல்லூறவு
பிரதேச செயலகம் மற்றும் அரச காரியாலயங்களுடனான தொடர்பு

முரண்பாடுகளை கையாளும் விதம்

அரச உடைமைகள் மற்றும் தனி நபர் உரிமைகள் பாதிக்கப்படும் சந்தர்பத்தில் உரிய அதிகாரிகளுக்கு முறையாக சுட்டி காட்டி அதற்கான தீர்வுகளை பெற்று கொள்ள முயற்சித்தல்.

Published by

Leave a comment